பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*92 விட்டு சித்தன் விரித்த தமிழ் போய்ப்பா டுடையகின் தந்தையும் தாழ்த்தான் பொருதிறல் கஞ்சன் கடியன் காப்பாரு மில்லை கடல்வண்ணா! உன்னைத் தனியேபோய் எங்கும் திரிசி பேய்ப்பால் முலையுண்ட பித்தனே! கேசவ கம்பீர் உனைக்காது குத்த ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்திநான் வைத்தேன்: (3)

பாடு-பெருமை; போய் தாழ்த்தான்-தாமதித்தான்; பொருதிறல் போர் செய்வதில் வல்ல; திரிதி.திரி கின்றாய்; அடைக்காய்.வெற்றிலை பாக்குகள், !

என்பது பாசுரம். இதில், கண்ணா! உன்னைக் காப்பதில் வல்லவரான மாடு மேய்க்கப் போன நின் தந்தையும் வரத் தாமதித்தார்; கம்சன் நின்மீது கறுக்கொண்டு இருப்பதனால் எத்தச் சமயத்திலும் யாரையும் அனுப்புவன்; வழி தெரிந்து காப்பாற்ற வல்ல ஒருவரும் இங்கில்லை; நீயே அச்சமின்றி எங்கும் திரிகின்றாய்; சில சமயம் அவர்களை விட்டுப் பிரிந்தும் செல்கின்றாய். இப்படியெல்லாம் செய்கின்ற நீ இங்கு வா; உன் காது குத்து விழாவுக்கு ஆய்ப்பாடிப் பெண்கள் வந்திருக்கின்றனர்; அவர்கட்குக் கொடுக்க வெற்றிலைப் பாக்குகளெல்லாம் தயாராக உள்ளன . என்று சொல்லி அழைக்கின்றாள். விண்னெல்லாம் கேட்க அழுத்திட்டாய் உன்வாயில் விரும்பி யதனைநான் நோக்கி மண்னெல்லாம் கண்டுஎன் மனத்துள்ளே அஞ்சி மதுசூத னேஎன்றி ருந்தேன் புண்ணேதும் இல்லை,உன் காது மறியும்: பொறுத்திறைப் போதுஇரு, நம்பி, கண்ணா! என் கார்முகி லே!கடல் வண்ணா! காவல னேiமுலை யுனாயே! (6)