பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைப் பெருமாளின் வளர்ச்சி நிலைகள் 93. (விண்-மேலுலகங்கள்; அதை-மண்ணை, மண்.உலகங்' கள்; மறியும்.சிறிது மடங்கும்; இறைபோது.கண நேரம், ! - என்பது பாசுரம். இதில், காதில் கடிப்பு இடவேண்டும் என்று யசோதை அ ைழ த் து ம் அவளைப்பாராது. மண்ணையும் தின்கின்றான். அதற்காக அவள் கோபங். கொண்டு அவனை அடிக்கின்றாள். அப்போது அவன் தனது வாயைத் திறந்து கொண்டு விண்னெல்லாம் கேட்கும்படி அழுகின்றான். யசோதை இவன் தின்ற மண்ணின் அளவைத். தெரிந்துகொள்ள விரும்பி வாயைப் பார்க்கையில், அவன் வாயினுள் உலகங்கள் எல்லாம் முன்போல் இருக்கக் கண்டு, 'இவனை நம் செல்லப் பிள்ளை' என்று அடித். தோமே! இவன் சர்வேச்வரனன்றோ?' என அஞ்சி இருக் கின்றாள். பிள்ளைப் பெருமாள் தன்னை யசோதை இப்படி வேறாக எண்ணியதைப் பொறாமல் அதனை அவள் மறந்து தன் பிள்ளை என்றே கருதித் தழுவும்படி அருகில் வந்து நிற்கின்றான். அப்போது அவன் காதில் கடிப்பை இடும்படி முயல, பிள்ளைப் பெருமாள் அது கண்டு. :அம்மா! என் காது குத்தியதனால் புண்ணாய் உள்ளது;. அதை இட்டால் நோகும். ஆதலால் அஃது எனக்கு, வேண்டா என மறுக்கின்றான். யசோதை உன் காதில் புண் ஒன்றும் இல்லை; புண் ஆறிவிட்டது; இந்த குண்டலத்தை இடும்போது உன் காது சற்று மடங்கும்; அதை மாத்திரம் பொறுத்துக் கொள்ள வேண்டும்' என்று சொல்ல, பிள்ளைப் பெருமாள் அதற்கு இசைந்து நிற்கின்றான். யசோதை அ வ ைன ப் பலபடியாகக் கொண்டாடிக் காப்பிடும்போது உண்டாகும் நோவைப் பொறுப்பதற்காக முலை உண்ண வேண்டும் என்று விரும்பு கின்றாள்' என்ற விவரம் கண்டு மகிழலாம், இதிலுள்ள 12 பாசுரங்களில், நம்மாழ்வாரின் பன்னிரு திருநாமத்’ திருவாய்மொழி போல எம்பெருமானின் 12 திருநாமங் களும் வருவதைக் கண்டு மகிழலாம்.