பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

势鸡 விட்டு சித்தன் விரித்த தமிழ் ரோட்டம்: யசோதைப் பிராட்டி பிள்ளைப் பெருமா ளுக்குக் காதைப் பெருக்கிக் கடிப்பிட்ட பிறகு, அந்தக் களைப்பு நீங்க அவனை நீராட்டம் செய்ய ஆசைப் படுகின்றாள். இதற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஆயத்தப்படுத்தி வைக்கின்றாள். பின்னர் பிள்ளையை நோக்கி அவனைப் பல படியாகப் புகழ்ந்தழைத்து மஞ்சன மாட்டியதை ஆழ்வார் அதுபவிக்க விரும்பி தம்மை அவளாகப் பாவித்து அவள் அக்காலத்தில் பேசியதை யெல்லாம் பேசி இனியராகின்றார் இத்திருமொழியில் (2.4). வெண்ணெய் அளைந்த குணுங்கும் , விளையாடு புழுதியுங் கொண்டு திண்னெண் இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கான் ஒட்டேன் எண்ணெய் புளிப்பழங் கொண்டிங்கு எத்தனை போதுமி ருந்தேன் கண்ணல் அரிய பிரானே! . நாரணா! நீராட வாராய். (1) என்பது பாசுரம். இதில், தாரார் தடம்தோள்கள் உள்ள வாவும் கை தீட்டி, ஆராத வெண்ணெய் (சிறுத்திருமடல்) அனைந்ததனால் உடம்பெல்லாம் அந்த வெண்ணெய்பட்டு மொச்சை நாற்றம் வீசும்; அத்துடன் விளையாடப் போனால் அதன்மேல் புழுதிபடியும்; இவ்விரண்டும் உடம்பி விருந்தால் தினவு தின்னும்; அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையில் தேய்ப்பானாம். இப்படியெல்லாம் பிள்ளைப் பெருமாள் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் யசோதை அவனை நீராட அழைக்கின்றனள். - அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலிற் கலந்து சொம்படி கான்சுட்டு வைத்தேன் தின்னல் உறுதியேல் கம்பீ!