பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளை பெருமாளின் வளர்ச்சி நிலைகள் 95 செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர் சொப்பட நீராட வேண்டும்! சோத்தம்பிரான் இங்கே வாராய்! (2.4:5) செப்பு-பொற்கலசம், சிறுபுறம் பேசி.அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி, அக்காரம். வெல்லக்கட்டி; சொப்பட-நன்றாக, தின்னல் உறுதல்-விரும்புதல்; சோத்தம்-அஞ்சலி.1 என்பது பாசுரம். இதில், இப்பையல் அழுக்குடம்பனாய்த் திரிகின்றான் என்று ஆயமங்கையர் ஏசுவதற்கு இடம் இல்லாதபடி நீராடவருவையாகில் நினக்கு வேண்டிய பலகாரங்கள் தருவேன்' என்கின்றாள். குழல்வாரக் காக்கையை வா எனல்; மஞ்சன மாட்டிய பிறகு பிள்ளைப் பெருமாளுக்குக் குழல் வாரக் கருது கின்றாள். அவன் அழுது ஒடுதல், ஆடுதல் செய்யாமல் செவ்வனே இருந்து குழல் வாரிக்கொள்வதற்காக, உலகத்தார் தலைவாரும்போது வசப்படுத்துவதற்குச் சொல்லுவது போலே, அக்கக்காய் குழல்வாரவா என்று சொல்லிக் கண்ணனைச் சீராட்டிக் கொண்டு தன் வசப் படுத்தினபடியை ஆழ்வாரும் அநுபவிக்க விரும்பித் தம்மை அவளாகப் பாவித்து அக்காலத்தில் அவள் அக்கக்காய் என்று அழைத்தாப் போலே தாமும் அழைத்துச் சீராட்டிக் குழல் வாருகையாகின்ற ரசத்தை அநுபவித்து மகிழ் கின்றார் (2.5). . - - பின்னை மணாளனை பேரினிற் கிடந்தானை' முன்னை அமரர் முதல்தனி வித்தினை என்னையும் எங்கள் குடிமுழு தாட்கொண்ட மன்னனை வந்துகுழல் வாராய், அக்காக்காய் மாதவன் தன்குழல் வாராய், அக் காக்காய்! (1) |பின்னை-நப்பின்னை: மண்ாள்னை-நாயகனை பேர். திருப்பேர் தகர்; முன்னை அமரர் .பகவக