பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GÉ விட்டு சித்தன் விரித்த தமிழ். நுபவத்தில் முதல்வரான நித்திய சூரிகள்; தனி வித்து-ஒப்பற்ற காரணன், குழல்.கூந்தல்; அக்காக் காய்-காக்கையே! என்பது பாசுரம். காக்கை வந்து கத்தும்போது குழந்தைகள் பராக்காக இருக்குமாதலால் அப்போது குழந்தைகட்குத் தலைவாருதல் சுகமாய் முடிதல்பற்றி அச்செயலைக் காக்கையின்மேல் ஏற்றிக் குழல் வாராய் அக்காக்காய்" என்கின்றாள். உக்தி எழுந்த உருவ மலர்தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் கொந்தக் குழலை குறந்து புளியட்டி தந்தத்தின் சீப்பால்குழல் வாராய், அக்காக்காய் தாமோ தரன்தன்குழல் வாராய்,அக் காக்காய் (8) |உத்தி-திருநாபி, சதுமுகன்-பிரமன்; புளி அட்டி.புளிப் பழத்தையிட்டு; குறந்துவசிக்குவிடுத்து) என்பது பாசுரம். யசோதைப் பிராட்டி பிள்ளைப் பெருமாளை எண்ணெய் தேய்த்துப் புளிப்பழம் இட்டு: நீராட்டியதனால், அப்படி நீராடிய கண்ணனது கூந்தல் சிக்காகியிருக்கும்; ஆதலால் யசோதைப் பிராட்டி, காக்கையே! நெறிப்புப்போம்படி எண்ணெய் தடவித் தந்தச் சீப்பினால் தலைவார வருக என்கின்றாள். - கோல் கொண்டு வா என்னல்: யசோதைப் பிராட்டி கண்ணனைக் குழல்வாரின பின்பு பூச்சூட நினைத்திருக் கையில் கண்ணபிரான் சாதி ஆசாரத்திற் கேற்பக் கன்று மேய்க்கும் பிள்ளைகளுடன் போக நினைத்துக் கன்று மேய்க்கின்ற கோல் கொடு என்று தாயை வற்புறுத்திக் கேட்க, அவளும் இவனைப் பூச்சூடிக் காணவேண்டும் என் கின்ற அவாவினாலே அதற்கிசைவதுபோல் நடித்துக் கோல் கொடாமல் அவனை வஞ்சித்துச் சொல்லியதை ஆழ்வார் தம்மை அவளாகப் பாவித்துச் சொல்லி இனியரா