பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளை பெருமாளின் வளர்ச்சி நிலைகள் 97 கின்றார். இத்திருமொழியும் (2.6) காக்கையைக் குறித்துச் சொல்லியது என்பதை இத்திருமொழி 7ஆம் பாட்டால் அறியலாம். வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி தாலிக் கொழுங்தைத் தடங்கழுத் திற்பூண்டு பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு காலிப்பின் போவாற்கோர் கோல் கொண்டுவர கடல்கிற வண்ணற்கோர் கோல் கொண்டுவா: (1) |வேலிக்கோல்.வேலிக் கால்களிலுள்ள கோல்; விளை யாடுவில்-லிலோகரணமான வில்; கொழுந்து தாலி.ஆமைத் தாலி; பீலி.மயில் தோகை; பிறகு இட்டு.பின்புறத்தில் கட்டிக் கொண்டு; காலி. பசுக் கூட்டம்.1 என்பது பாசுரம். இடைச் சாதிக்குத் தக்கபடி ஆமைத் தாலி என்னும் ஒருவகை ஆபரணத்தைக் கழுத்திலணிந்தும் மயில் தோகைகளைச் சேர்த்துக் கட்டிப் பின்புறத்தில் அணிந்தும், வேலிக் கால்களில் வெட்டின சிறு கோல்களை வில்லாகச் செய்து நானேற்றி வளைத்து விளையாடிக் கொண்டே கன்றுகளை மேய்க்கச் செல்லும் என் மகனுக்குக் கோல் கொண்டுவா’ என்கின்றாள் இதில், பொற்றிகழ் சித்திர கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை மற்றைக்கண் கொள்ளாமே கோல் கொண்டுவா மணிவண்ண நம்பிக்கோர் கோல்கொண்டுவா! (7) |பொன்திகழ். அழகியதாய் விளங்குகின்ற; பொருப்பு. மலைச்சாரல்; கற்றை-தொகுதி; கடியன்.குரூரன்; என்பது பாசுரம், இதில், காக்கையே! இவன் முன்னம் வி.7 -