பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 விட்டு சித்தன் விரித்த தமிழ் இராமனாயிருந்த காலத்தில் உன் சாதியில் ஒருவன் செய்யத் தகாததைச் செய்ததற்காகக் கண்ணொன்றைப் பறித்திருக்கின்றான். நீ இப்போது நான் சொல்லியதைச் செய்யாமலிருந்தாலோ உன் மற்றொரு கண்ணையும் இடுங்கி விடுவான்; ஆகவே, இவனுக்கு விரைந்து கோல் கொண்டுவா’ என்கின்றாள். பூச்சூட்டல்: கன்று மேய்க்கப் போகவேண்டும் என்று அடம்பிடித்து அழுது தொல்லை தந்த கண்ணனை யசோதை, 'அக்காக்காய்! நம்பிக்குக் கோல் கொண்டுவா" என்று சொல்லி ஏமாற்றி அவனது அழுகையை நிறுத்திய பிறகு, தான் நினைத்தபடி நான் பல்வேறு மலர்களை வைத்திருக்கின்றேன்; அவை செவ்வியழிவதற்கு முன்னே நீ அவற்றைச் சூட வர வேண்டும் என்று அப்பிள்ளைப் பெருமாளை அழைத்த முறையை ஆழ்வார் தாமும் அநுபவிக்க அவாக்கொண்டு தம்மை அவளாகப் பாவித்து அவள் சொல்லியவாறே சொல்லியழைத்து இனியரா ஒன்றார் இத்திருமொழியில் (2.7). ஆனிரை மேய்க்க போதி அருமருக் தாவ தறியாய் கானகம் எல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப தேனில் இனிய செண்பகப் பூச்சூட்ட வாராய். (1) |கானகம்.காடு: பற்றாதார்.பகைவர்கள்; என்பது பாசுரம். இந்தப் பிள்ளைப் பெருமாள் எங்கள் விட்டில் கைப்பானையிலிருந்த பாலைப் பருகிப் போனான்." என்று உகவாதார் சொல்லும்படிக் கறந்த பானையிலிருந்த பச்சைப் பாலைப் பருகிய பித்தனாயினும் தேனைவிட