பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளை பெருமாளின் வளர்ச்சி நிலைகள் 99 இனியவனே! உன்னுடைய திருமேனியின் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் காட்டிலே போய் திரிவது தவிர்ந்து செண்பகப்பூவை நான் சூட்டும்படி வரவேண்டும்’ ’ என்கின்றாள். அண்டத் தமரர்கள் சூழ அத்தரணி புள் அங்கி ருந்தாய் தொண்டர்கள் கெஞ்சில் உறைவாய் தூமல ராள்மண வாளா! உண்டிட்டு உலகினை ஏழும் ஓரால் இலைத்துயில் கொண்டாய் கண்டுகான் உன்னை உகக்கக் கருமுகைப் பூச்சூட்ட வாராய்! (9) (அண்டம் . பரமபதம்; அமரர்கள் - நித்தியசூரிகள்; அத்தாணி.அருகான இடம்; தொண்டர்கள். அடி பார்கள்; உண்டிட்டு- அமுதுசெய்து; துயில் . உறக்கம்; உவக்க.மகிழ; கருமுகை.இருவாட்சி) என்பது பாசுரம், இதில், பரமபதத்தில் ஏழுலகும் தனிக் கோல் செல்ல வீற்றிருப்பவனே! அந்த இருப்பைக் காட்டிலும் மிக விரும்பி அன்பர்களின் நெஞ்சில் எழுந்தருளி யிருப்பவனே! பெரிய பிராட்டியின் கேள்வனே! உலகங் களைப் பிரளயம் கொள்ளாதபடி, திருவயிற்றில் வைத்துக் காப்பவனே! மாலையும் மயிர்முடியுமாக உன்னை நான் கண்டு களிக்குமாறு இருவாட்சி சூட வர வேண்டும்' என் கின்றார். இப்பாசுரங்களில் பாசுரத்திற்கு ஒன்றாக (செண் பகம், மல்லிகை, பாதிரி, செங்கழு நீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை என்று) எட்டுப் பூக்கள் குறிப்பிடப் பெற்றிருப்பதைப் பார்க்கும்போது நாடோறும் மலர் களால் மூடப்பெற்று எண்ணற்ற அடியார்கட்குச் சேவை சாதிக்கும் ஏழுமலையான் நினைவுக்கு வருகின்றான். காப்பிடல் : ய சோ ைத ப் பிராட்டி பிள்ளைப் பெருமாளை நீராட்டிக் குழல் வாரிப் பூச்சூட்டின பின்பு