பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1so விட்டு சித்தன் விசித்த தமிழ் அவனுக்குக் கண்ணேறு (திருஷ்டி தோஷம்) ஏற்படாதபடி காப்பிட வேண்டுமென்று கருதி, நீ பொழுதுபோன வேளையில் நாற்சந்தி, முச்சந்தி முதலிய இடங்களில் நில்லாதே' என்று அப்பிள்ளையை அழைத்துக் காப்பிட்ட படியை ஆழ்வாரும் அதுபவிக்க விரும்பித் தம்மை அவளாகப் பாவித்து, திருவெள்ளறையில் பிள்ளைப் பெருமாள் அர்ச்சையாய் நிற்கின்ற நிலையிலே அந்த யசோதைப் பிராட்டியின் பேச்சாலே காப்பிட அழைத்து இனியராகின்றார் இத்திருமொழியில் (2.8). இந்திர னோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம் மந்திர மாமலர் கொண்டு மறைந்துவ ராய்வந்து கின்றார் சந்திரன் மாளிகை சேரும் - சதுரர்கள் வெள்ளறை கின்றாய் அந்தியம் போதிது வாகும்; அழகனே காப்பிட வாராய். (1) இமையவர் - தேவர்; உவராய் . அண்மையராய்; அந்தியம்போது.மாலை தேரம்} என்பது பாசுரம். இதில் திருவெள்ளறைத் தேனே, இந்திரன் நான்முகன் சிவபெருமான் சிறந்த மந்திர மலர் களுடன் வந்து மறைந்து நிற்கின்றனர். அந்திக் காலமும் வந்துவிட்டது. உன் அழகுக்கு ஒருவித குறையும் வராதபடி நான் திருவந்திக் காப்பிடவேண்டும். ஆகவே, இல்லம் வருக என்கின்றார். மேலும், இருக்கொடு நீர்சங்கிற் கொண்டிட்(டு) எழில்மறை யோர்வந்து கின்றார் தருக்கேல் கம்பி! சக்தி கின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்