பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னை பெருமாளின் வவர்ச்சி நிலைகள் 101 திருக்காப்பு கானுன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை கின்றாய்! உருக்காட்டும் அந்தி விளக்கின்று ஒளிகொள்ள ஏற்றுகேன் வாராய். (9) இருக்கொடு - புருஷசூக்தம் முதலான ருக்குகள் சொல்லிக்கொண்டு; மறையோர்-அந்தணர்கள்; தருக்கேல்.செருக்கித் திரியாதே; காப்பு-இரட்சை; தேசு-தேஜஸ்) என்பது மற்றொரு பாசுரம். இதில் உனக்குக் காப்பிடு வதற்கு அந்தணர்கள் சங்குகளில் நீர் எடுத்துக்கொண்டு வந்துள்ளனர்; நீ நாற்சந்தியில் திரிதல் ஆகாது. அது கீழான தேவதைகள் வசிக்கும் இடம். தாய் வார்த் தையைத் தட்டாதே. உனக்கு இரட்சை இடுவதற்காக அந்தி விளக்கு ஏற்றுவேன். இதைக் காண வருக ! என்கின்றார். இக்காலத்தில் விளக்கேற்றிக் குழந்தை கட்குச் சுழற்றும் வழக்கம் இருப்பது நினைவு கூரத் தக்கது. பிற்காலப் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் வரும் காப்புப் பருவத்திற்கு இது அடியெடுத்துத் தந்ததாகக் கருதலாம். இத்திருமொழியில் வரும் மற்றொரு பாசுரம் சிற்றில் சிதைத்தல் பருவம்' என்பதற்கு அடியெடுத்துத் தந்ததாகக் கொள்ளலாம். . செப்போது மென்முலை யார்கள் - சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு அப்போது கான்உரப் பப்போய் அடிசிலை உண்டிலை, யாள்வாய்! முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை கின்றாய்! இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் (3)