பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}2 விட்டு சித்தன் விரித்த தமிழ் (செப்பு - பொற்கலசம், சிறு சோறு . மணற் சோறு; இல் - சிற்றில் (மணல் வீடு); சிதைத்திட்டு-அழித் திட்டு, உரப்ப - கோபித்துக் கொள்ள, அடிசில் . சோறு) என்பது பாசுரம். இதில், சிறு பெண்கள் விளையாட்டாக சமைத்துக் கொண்டிருந்த மணற் சோற்றையும் கட்டின மணல் வீட்டையும் நீ சிதைத்தாய்; அவர்களை வலுச் சண்டைக்கு இழுத்தாய். நான் நீ இப்படித் திரியக் கூடாது" என்று உன்னைச் சிறிது அதட்டினேன், ஒருகால் நான் அடிப்பேன் என்று அஞ்சி நீ ஓடிப் போனாய்; சோறும் உண்டிலை. இப்போது அப்படி ஒன்றும் செய்யேன். காப்பிட வாராய்' என்கின்றார். பிள்ளைத்தமிழ் இலக்கியம் : பிற்காலத்தில் எழுந்த இந்த வகை இலக்கியத்திற்கு வித்திட்டவர் விஷ்ணு சித்தரே என்பதை நாம் காணும்போது எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகின்றோம். பிள்ளைப் பாட்டின் இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல்", பிள்ளைப் பாட்டே தெள்ளின் கிளப்பின் மூன்று முதலா மூவேழ் அளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே" என்று பேசும். திங்கள்’ என்னாது ஆன்ற திங்கள் என்று சிறப்பித்ததனால் பிள்ளைப்பாட்டை ஒன்றித்த மாதங் களில் (3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21) கேட்பித்தல் வேண்டும் என்பதையும், மூன்றாம் ஆண்டிலும் ஐந்தாம் ஆண்டிலும், ஏழாம் ஆண்டிலும் கேட்பிக்கினும் இழுக்கு அன்று என்பதையும் அறிவித்தற்காகும். ஆண்பாற் பிள்ளைப்பாட்டில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருக என்றல், அம்புலி, 2. பன், பாட் - 101.