பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#7. 18.

  1. 9.

20. xii முப்போதும் திருநீறு தாங்கும் நெற்றி: மூழ்கிமிக வைணவத்தில் திளைக்கும் நெஞ்சம்; தப்பேதும் அறியாத செம்மல் வாழ்க்கை; சவியாத தமிழ்ப் பேச்சு; பயணம் செய்யும் அப்போதும் விடுதிகளில் தங்கும் போதும் அணுவளவும் நேரத்தை வீணாக் காமல் எப்போதும் எழுதிக்கொண் டிருக்கும் கைகள்; இவற்றின் பேர் சுப்புரெட்டி யார்என் பார்கள். பண்பாட்டிற் கொருவடிவம்; எளிய தோற்றம் பழகுவதற் கினியமுகம்; பழகி விட்ட நண்பர்களின் நலன்களையே கருது கின்ற நல்லமனம்; ஆராய்ச்சி போற்றும் உள்ளம் பண்பாடு, வள்ளுவனார், இராம லிங்கர், பகர் மு. வ. இவர்பற்றி ஆராய் கின்ற வண்புலவர் பரிசுபெற வைப்பு வைத்த வள்ளலுளம் இவைகப்பு ரெட்டி யாராம். எத்தனைதான் புகழ்தன்னை எய்தி னாலும் எழுபதுக்கு முன்னாலே எழுபத் தெட்டு சத்தான நூல்எழுதி வெளியிட் டாலும் சலியாமல் கலைக்கழகம் பலவும் சென்று முத்தான விரிவுரைகள் ஆற்றி னாலும் முயன்றுகலைக் களஞ்சியத்தைச் - சமைத்திட் டாலும் எத்துணையும் செருக்கடையா எளிய உள்ளம் இதன்பெயர்தான் சுப்புரெட்டி யார்என் பார்கன். தாய் தன்னைக் குடல்விளக்கம் செய்த அந்தத் தாமோத ரன்போலக் கோட்டத் துரரைச் சேயாக அவ்வூரில் பிறந்த தாலே சேயோரும் அறிந்திடவே செய்து விட்டார்