பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi கள்ளத்தில் கண்ணனுக்கே காதலியாய்த் தன்னைத்தான் காட்டு மாறும், பள்ளத்தில் வீழ்ந்தோர் பதவிபெறப் பத்திநெறி படைத்த வாறும், 84. இருப்பூர்தி, பேருந்து போன்ற தனித்தமிழ் இனிய சொற்கட்(கு) இருப்பாய் விளங்கும் இனியவிந் நூலினிலே எடுத்துக் காட்டி, விருப்புற்றார் யாரும் விளங்கி மகிழ்வகையில் விரித்த தன்மை திருப்பதிப் பல்கலைக்கே செந்தமிழைத் தந்தவரின் சிறப்பே அன்றோ? 15. பாடிப் பரவுதற்கே பட்டர் பிரான் வாய்மலர்ந்த பாட்டென் றெண்ணும் வாடிக்கை அன்பர்கள் நெஞ்சில் தமிழ்ச்சொல் வளங்கள் எல்லாம் ஒடிப் பெருகும் வகையில் படிமவகை உத்தி தன்னைத் தேடி விளக்குதலும் சுப்புரெட்டி யார்க்குரிய சிறப்பே அன்றோ? வேறு 16. ஆய்ப்பாடிக் கண்ணனையே தெய்வமாக ஆழ்வார்கள் பற்பலரும் சுவைத்தார்; பெற்ற சேயாகப் பெரியாழ்வார் சுவைத்தார்; நாளும் செய்யதமிழ் மாலைகளே செய்து குடி நாயகனாய் ஆண்டாளும் சுவைத்தார்; அந்த நற்றமிழைச் சுப்புரெட்டி யார்சு வைத்துத் தோய்வுற்றார்; அதனாலே நாம்சு வ்ைக்கச் சுவை ததும்பும் இந்நூலை யாத்துத் தந்தார்.