பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 விட்டு சித்தன் விரித்த தமிழ் வீட்டிலே உன் பக்கத்திலேயே வைத்துக்கொள். இல்லா விடில் நாங்கள் ஆயர்பாடியில் குடியிருக்கவே முடியாது" என்கின்றாள். இந்நிகழ்ச்சியை பெரியாழ்வார், திருவுடைப் பிள்ளைதான் தீய வாறு - தேக்கமொன் றும்இலன்: தேசு டையன் உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து கின்றான். அருகி ருக்தார் தம்மை அகியாயம் செய்வது தான்வ ழக்கோ? அசோதாய்! வருகவென் றுன்மகன் தன்னைக் கூவாய் வாழ வொட்டான் மதுசூ தனனே. (2.9:3) !திருவுடைப் பிள்ளை-செல்வப் பிள்ளை; தேசு-புகழ்; போந்து.வந்து, அருகு-பக்கத்தில்; வழக்குநியாயம்; வாழவொட்டான்.குடிவாழ்ந்திருக்க வொட்டான்) வேண்ணெய் விழுங்கி வெறுங்க லத்தை வெற்பிடை விட்டதன் ஓசை கேட்கும்: கண்ண பிரான்கற்ற கல்வி தன்னைக் காக்ககில் லோம்,உன் மகனைக் காவாய் புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும்.தீமை புரைபுரை யால் இவை செய்யவல்ல அண்ணற்கண் னானோர் மகனைப் பெற்ற அசோதை நங்காய்உன் மகனை கூவாய் (2.9:1) 1வெற்பிடைகல்லில்; கல்வி.திருமிகுக் கலை; காவாய். தடுப்பாயாக, புரைபுரை.வீடுதோறும்; கூவாய். அழைத்துக் கொள்க) என்று அதுசந்தித்துக் களிப்பெய்துகின்றார். ஆய்ச்சியின் முறையீட்டைக் கேட்ட யசோதைப் பிராட்டி கண்ணனுடைய நற்குண நற்செயல்களை எடுத்துரைத்து கண்ணா, இங்கே வா’ என்று அழைக்க,