பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விளைத்த சிறு குறும்புகள் 107 அழகாகப் பின்னப்பட்ட பெரிய உறிமேல் திண்மை. யான பாத்திரத்தில் வெண்ணெய் வைக்கப் பெற்றுள்ளது. கண்ணன் அதைக் களவு செய்து உண்டுவிட்டு விரைவாக ஓடிவந்து பொய்யுறக்கம் கொள்ளுகின்றான். இதனைச் சொல்லி மகிழ்ந்து குழல் வாரிக்கொள்ள வரும்படி அழைக்கின்றாள் யசோதை. பெரியாழ்வாரின் உள்ளம் கண்ணனின் இந்தச் சிறு குறும்பில் ஈடுபட்டு, திண்ணக் கலத்துத் திரையுறிமேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல். (2.5:3) - |திண்ண.திண்ணிய, கலம்.பாத்திரம்; திரை.பின்னு தலையுடைய, விரைய-விரைவாக, உறங்கிடும். பொய் உறக்கம் கொள்ளும்) என்ற பாசுரத்தில் அதுசந்திக்கின்றார். ஓர் ஆ ய் ச் சி யி ன் குற்றப்பத்திரிகை இது: "அசோதாய், உன் மகன் வீட்டில் வயிறு வளர்ப்பதற்கு ஒன்றுமில்லாமல் இவ்வாறு தீம்பு செய்பவன் அன்றே; செல்வச் செருக்கினாலன்றோ செய்கின்றான்? நாம் இங்ங்ணம் செய்தால் நம்முடைய ஐசுவரியத்திற்கும் பிறப்புக்கும் தகுமோ? என்றும் இவன் ஆலோசிப்பதில்லை. தவிரவும், இப்படித் தீம்பு செய்வதே தனக்குப் புகழ் எனவும் நினைக்கின்றானே; இவன் இப்போது என் வீட்டில் வந்து உருக்குவதற்காக வைத்திருந்த வெண்ணெயைச் சிறிதும் மிஞ்சாதபடி புசித்துக் கடைசியில் வெறுங் கலத்தை வெற்பிடையிட்டு அதன் ஒசை கேட்டு’ (2.911) மகிழ்கின்றான். இவன் செய்த தீம்புகளை எங்களால் பொறுக்கமுடிகின்றதில்லை. புண்ணிலே புளிச்சாற்றைப் பிழிந்தாற்போல் பொறுக்கமுடியாத தீமைகளை ஒவ்வொரு வீட்டிலும் செய்கின்றான். இவனது திருட்டுத் தொழிலைத் தடுக்க எங்களால் முடியவில்லை. ஆகையால் உன் பிள்ளையைக் கூவியழைத்துத் தீம்பு செய்ய வொட்டாதபடி