பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{j6 விட்டு சித்தன் விரித்த தமிழ் பொத்த வுரலைக் கவிழ்த்து அதன் மேலேறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்த திருவயி றார விழுங்கிய அத்தன். (1.10:7) (பொத்த - அடியில் ஒட்டையுள்ள: தித்தித்த மதுரமான, ஆர-நிரம்ப; மொத்த. மிகுதியாக; அத்தன்-தலைவன்: - என்று ஆழங்கால்பட்டு அகமகிழ்கின்றார். இங்கு நல்ல உரலானால் அதை நடுவே யாரேனும் சிலர் கார் யார்த்த மாகத் தேடி வந்து தன்னைப் பிடித்துக்கொள்ளக் கூடு மென்று பொத்த உரலைத் தேடிப் பிடித்தான் என்பது சிறப்புப் பொருளாகும், தடா - மிடா: அடிக்கடித் தன் மகன் மீது புகார் சொல்லும் ஆய்ச்சியர் களை நோக்கி, "என் மகன்மீது வீண் பழி சுமத்தாதீர்கள்; களவு கண்டதுண்டாகில் கையும் பிடியுமாய்ப் பிடித்துக் கொணருங்கள்’’ என்று சொல்லிய யசோதை முன் ஆய்ச்சி மார் கண்ணனைக் கையும் பிடியுமாய்ப் பிடித்துக் கொணர, அது கண்ட யசோதை நான் பிள்ளையைப் பெற்று வளர்ப்பது மிகவும் அழகாயிருந்தது!’ என்று சொல்லித் தன்னைத் தானே;- மோதிக்கொண்டு அவர்கள் முன்னே தன் வயிற்றெரிச்சலெல்லாம் தோன்றும்படி அடிக்கின்றாள். இந்நிகழ்ச்சியை, திருடி கெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைத்தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்பூண்டான். (2.1:5) (திருடிகளவு செய்து, ஆப் பூ ண் டு-அகப்பட்டுக் கொண்டு; கடைத்தாம்பு.கடையும் தாம்பு; சோப் பூண்டு-அடியுண்டு; ஆப்பூண்டான்.கட்டுண்டான்ர் என்று அநுசந்தித்து மகிழ்கின்றார்.