பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# * {} விட்டு சித்தன் விரித்த தமிழ் மறந்து விட்டு அவனை எதிர் சென்று எடுத்துக் கொள்ளும்படி அவன் பண்ணின ஆச்சரியத்தில் ஈடுபட்டு *இப்பருவத்தில் இவன் இவ்வளவு விரகனாவதே என்று தன்னில்தான் மகிழ்ந்து பொலிகின்றாள். இந்த அநுபவத்தை ஆழ்வார் அநுசந்தித்து வியக்கின்றார் (2.9:4). இன்னோர் ஆய்ச்சி வந்து முறையிடுவது: "அசோதை தங்காய்! என் மகள் பாலைக் கறந்தெடுத்துக் கொண்டு வந்து அப் பாலை அடுப்பின் மேலேற்றி வைத்தாள்; அதற்குக் காவலாகவும் இருந்தாள். நான் அதைக் காய்ச்சு வதற்கு நெருப்பெடுத்து வர மேலண்டை வீட்டிற்குச் சென்றேன். அங்கே ஒரு சிறிது நேரம் பேசிக் கொண்டு நின்று விட்டேன். அதற்குள் நின்மகன் என் வீடு புகுந்து என் மகள் இருந்த இடத்திற்குச் சென்று பாத்திரத்திலுள்ள பச்சைப் பாலைச் (காய்ச்சாத பாலைச்) சாய்த்துப் பருகி விட்டு ஒன்றும் அறியாதவன் போல் வந்து நிற்கின்றான். இவனைக் கூப்பிட்டுச் சிட்சித்து அடக்கி வைப்பாயாக' என்கின்றாள் (2.9:5). இதைக் கேட்டும் யசோதைப் பிராட்டி கண்ணன்மீது சிறிதும் சினம் கொள்ளாது, அவனை மேலும் பலவாறு புகழ்ந்து இனி அண்டை வீடுகளுக்குப் போகாமல் நம் அகத்துக்கு வந்துவிடு. பக்கத்து வீட்டுக்காரர்கள் உன்னை வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். நான் அவற்றைக் காதால் கேட்கவும் சகிக்கவில்லை; வாயால் சொல்லவும் நாக்கு கூசுகின்றது. அவர்கள் வாய்க்கு இரையாகாமல் இங்கே வந்து விடுக' என்று வேண்டுவதை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் (2.6:6) அநுசந்தித்து மகிழ்கின்றார். இப் பதிகத்துப் பாசுரங்கள் யாவும் படித்து அநுபவிக்கத் தக்கவை. வேறு சில குறும்புகள் : கண்ணன் சிறுவனாக இருந்த போது சில கட்டெறும்புகளைப் பிடித்துக் கன்றுகளின் காதில் விடுவான். அதனால் அக் கன்றுகள் வெருண்டு