பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விளைத்த சிறு குறும்புகள் 1} { சிதறிப் போய்க் கண்டுபிடிக்க முடியாதபடி ஒடிப்போய் விடும். இதைக் கண்டு கண்னன் மகிழ்வான். இதனை யசோதைப் பிராட்டி, கன்றுகள் ஓடிவிட்டால், பால் கறக்க முடியாது; வெண்ணெயைத் திரட்டி விழுங்க உனக்கு வெண்ணெய் கிடைக்காது' என்று கூறுகின்றாள். இதனைப் பெரியாழ்வார், கன்றுகள் ஓடச் செவியிற் கட்டெறும்பு பிடித்து இட்டால், தென்றிக்கெடும் ஆகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் (2.4:2) (ஒடவெருண்டு ஒட, தென்றி.சிதறி; காண்பன். பார்ப்பேன்.) என்று ஒரு பாசுரத்தில் அது சந்தித்து மகிழ்கின்றார். கண்ணன் கட்டெறும்பைக் கன்றின் காதில் விட்டதைப் பாரதியார் வேறு விதமாக அநுசந்திக்கின்றார். இவர் கண்ணன் ஆறேழு கட்டெறும்புகள் அங்காந்திருக்கும் பெண் களின் வாயில் விட்டு வேடிக்கை பார்ப்பான். இதனைப் பாரதியார், அங்காங் திருக்கும்வாய் தனிலே-கண்ணன் ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்; எங்காகி லும்பார்த்த துண்டோ?-கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கை ஒன்றோ?! என்று கூறி மகிழ்வார். தீராத விளையாட்டுப் பிள்ளையின் .ெ த வி ட் டா த விளையாட்டுகளைப் பட்டியலிட்டுக் காட்டுவார். சில சமயம் எண்ணெய்க் குடத்தை உருட்டி விடுவான்; அவர்கள் சிந்திப்போன எண்ணெயை வழிப்பதும் 1. கண்ணன் பாட்டு - கண்ணன் விளையாட்டுப் பிள்ளை-6.