பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 விட்டு சித்தன் விரித்த தமிழ் துடைப்பதுமாயிருக்கையில் அவர்கள் அச்செயலை விட்டு ஒடி வரும்படி தொட்டிலில் படுத்து உறங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற் போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக் கிள்ளி விடுவான். அவனைச் சூழ்ந்து வரும் பிள்ளைகட்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்துவான். அப் பூச்சி காட்டுதலாவது, கண் இமையைத் தலைகீழாக மாற்றி விழித்தும், மயிரால் முகத்தை மறைத்துக் காட்டுவதுமான பயங்கரமான பாலசேட்டைகள். இவற்றை யசோதைப் பிராட்டி அநுபவித்ததைப் போன்று ஆழ்வார்தாமும் தம்மை யசோதை நிலையில் வைத்து, எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி கண்னைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே! (2.4:6) :கண்ணைப் புரட்டி-கண் இமையைத் தலைகீழாகப் புரட்டி; விழித்து-அப்பூச்சி காட்டி.: என்ற பாசுரத்தில் அநுசந்தித்து மகிழ்கின்றார். அண்ணன் கன்றுகளிடம் செய்யும் சேட்டை அவற்றின் வாலில் பனையோலைகளைக் கட்டிவிடுதல். அவை ஒடும் போது சலசலப்பு ஓசையை உண்டாக்கும்; அந்த ஓசையைக் கேட்டு மேலும் அவை வெருவியோடும். இங்ங்ணம் கன்றுகள் நாலாபக்கமும் சிதறியோடுவதைக் கண்டு கண்ணன் களிப்பெய்துவான். இதனை யசோ தைப் பிராட்டி கண்குளிரக் கண்டு அநுபவித்தாற். போல ஆழ்வார் தாமும் தம்மை அப்பிராட்டி நிலையில் பாவனை செய்து கொண்டு; . கன்றினை வாலோலை கட்டி (2.4:8) என்ற சொற்றொடரில் அநுசந்தித்து மகிழ்கின்றார். சிறு பெண்களிடம்: பெதும்பைப் பருவமுடைய மகளிர் சிற்றில் அமைத்தும் சிறு சோறு சமைத்தும் மணவில்