பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##6 விட்டு சித்தன் விரித்த தமிழ் திருந்தாலும் பிறருடைய இம்பும் அவன் தலையில் ஏறும் என்று விநோதமாகக் காட்டப்பெற்றது. கண்ணனிடம் நலிவுபட்ட ஆயமகளிர் பலர்வந்து து க ச ைத ப் பிராட்டியிடம் முறையிடுகின்றனர். ஒரு சிறு கூட்டத்தின் முறையீடு இது. 'அம்மா உங்கள் கண்ணன், தான் நினைத்தபடி தீம்பு செய்யவொண் ணாதபடி பலருடைய போக்குவரத்துள்ள இடத்தில் விளையாடினாலும் அங்கும் வந்து தீமைகள் செய்கின்றான். இன்று பலரும் கூடும் யமுனையாற்றின் மணலில் விளை யாடிக் கொண்டிருந்தோம். கண்ணன் எங்கள் மீது சேற்றை ஆ_டெறிந்து எங்களுடைய வளையல்களையும் துகில் களையும் வாரி வாரி எடுத்துக் கொண்டு காற்றிலும் கடிய வேகத்துடன் வீடு வந்து புகுந்து கொண்டான். வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கதறுகின்ற எங்களைக் குறித்து ஒரு வாய்ச்சொல்லும் அருளவில்லை. வளையல் விஷயமாகவும் பேச்சு இல்லை' என்கின்றனர், (2.10:1) இன்னொரு மகளிர் கூட்டத்தின் முறையீடு இது: கநாங்கள் எங்கள் ஆடைகளைக் கரையில் களைந்து வைத்து விட்டு ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தோம். அப்போது உங்கள் (எங்கள்?) கண்ணன் அவற்றை வாரி எடுத்துக் கொண்டு வந்து விண்ணை முட்டும் குருந்தமரத்தின் மீது ஏறிக் கொண்டான். நாங்கள் எவ்வளவு வேண்டியும் அவற்றை எங்களிடம் தந்தருள் மறுக்கின்றான்' என்கின்றனர் (2.10:2). ஆய்ச்சியரின் குற்றச்சாட்டுகள் : நாள்தோறும் ஆய்ச்சியரின் வாய்முறையீடுகள் வந்து குவிகின்றன. ஒர் ஆய்ச்சி இவ்வாறு முறையிடுகின்றாள்: ஆண்டு தோறும் திருவோண நட்சத்திரத்தைக் கொண்டாடு கின்றேன். மாதந்தோறும் கொண்டாட வசதிகள் இன்மையால், இவ்வாண்டு அதைக் கொண்டாட, செந். நெல் அரிசி, சிறு பயற்றம் பருப்பு, காய்ச்சித் திரட்டிய கன்னற்பாகு, மணம் மிக்க புத்துருக்கு நெய், பால்