பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விளைத்த சிறு குறும்புகள் 117 இவற்றைக் கொண்டு பாயசம், பட்சணங்களை நோன்புக்கு உறுப்பாகச் சமைத்தேன். இப்பிள்ளையின் இயல்பை முன்பிருந்தே அறிவேன், விரதத்திற்குச் சமைக்கப் பெற்ற வற்றையெல்லாம் ஒன்றும் மிகாதபடி விழுங்கிவிட்டு அதிலும் மனநிறைவு கொள்ளாமல், நான் இன்னமும் உண்ண வேண்டும் என்று சொல்லிக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்று நின்றான். உன் பிள்ளையை அழைத்துக் கொள்க. நீ பிள்ளையை வளர்க்கும் விதம் மிக அழகு!" என்கின்றாள். இந்த நிலையையும் ஒரு பாசுரத்தில் (2.9:7) ஈடுபட்டு மகிழ்கின்றார் ஆழ்வார். இங்ங்ணம் ஆய்ச்சி கூறியதைக் கேட்டு யசோதைப் பிராட்டி தன் பிள்ளையை நோக்கி, கண்ணா, இங்கே வந்துவிடுக; மாட்டேன்" என்று சொல்லாமல் வந்துவிடு. நம் வீட்டில் விளையாடுவதற்கு விசாலமான இடம் உண்டு. இழிசனங்களான வேலைக்காரிகளும் வேலைக்காரர்களும் கூட உன் மீது குற்றம் சுமத்தும் அழுக்காறுடையவர் களிடமிருந்து கொண்டு விளையாடாமல், இசைந்திடும் குழலழகும் நீயுமாய் வரும் நிலையைக் கண்டு நான் மகிழும் படி இங்கு வந்துவிடு. தாய் சொல்லைத் தட்டாமலிருப்பது தான் நல்ல பிள்ளைக்கு அழகு, தாமோதரா, இங்கு போதருக' என்று கண்ணனை அழைக்கின்றாள். தாமோதரா: என் கயிறுண்டு; உன் வயிறுண்டு; அங்கிருந்து கொண்டு பெறும் பேறு என்பது உள்ளுறை. இக்காட்சி யிலும் ஈடுபடுகின்றார் ஆழ்வார் (2.9:8). யசோதை இப்படிப் பாடுபட்டுக் கூப்பிட்டும் கண்ணன் வரவில்லை. மாறாக, மற்றோர் இடைச்சி அகத்தில் நுழைகின்றான். அங்கு வெல்லப் பாகுடன் தயாரிக்கப் பெற்ற இலட்டும், சீடை என்ற தின்பண்டமும், காரெள் இட்டு வாரின எள்ளுருண்டை ஆகியவற்றைத் தனித்தனியே பாத்திரங்களில் வைக்கப் பெற்றிருப்பதைக் காண்கின்றான். இவற்றை உறியில் வைத்து தன் வீடுதானே என்று காவல் வைக்காமல் வெளியில் சென்றிருந்தாள் இடைச்சி. இது