பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 விட்டு சித்தன் விரித்த தமிழ் தான் தக்க சமயம்!" என்று கண்ணன் அவற்றையெல்லாம் ஒருசேர விழுங்கி விட்டு வெளியே வந்து விடுகின்றான். இவ்வளவிலும் மனநிறைவு பெறாமல் மீண்டும் அகத்தினுள் புகுந்து உறியை நோக்கி செவ்வியையுடைத்தான வெண்ணெய் இருக்குமா?’ என்று ஆராய்கின்றான். இச் செய்தியை இடைச்சியொருத்திக் கூறி நீ பிள்ளையை வளர்க்கும் அழகே அழகு!’ என்று இடித்துக் காட்டு கின்றாள் (2.9:9). இந்த இடைச்சி சொல்லி வாய் மூடுவதற்குள் மற்றொருத்தி வந்து கண்ணன் தன் வீட்டில் நடந்தவற்றை நவிலுகின்றாள். வந்தவள் யசோதை நங்காய்! உன் மகன் புரிந்த தீம்புகளை எடுத்துச் சொல்லுவதற்கு முன் நீ சீற்றங்கொள்ளுகின்றாய்; உன் பிள்ளையே வஞ்சகச் செயல்களைப் புரிபவனாக இருக்கின்றான்' என்கின்றாள். "அவன் என்ன தீம்பு செய்தான்?’ என்று யசோதை கேட்க, வந்தவன், 'என் வீட்டில் புகுந்து என் மகளைப் பேர் சொல்லி அழைத்து, அவளுடைய கையிலிருந்த வளையல்களை வலிந்து பறித்துக் கொண்டு சென்று, காட்டிலிருந்து நாவற்பழங்களைக் கொணர்ந்து விற்கும் பெண் பிள்ளையிடம் வளையல்களைத் தந்து அதற்குப் பதிலாக நல்ல பழங்களைப் பெற்றுக் கொண்டு திரும்புகை யில் என்னைக் கண்டு விட்டான். உடனே கண்ணன் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சுட்டிக்காட்டுவது போல், நான் வளையலைக் கொடுக்கவில்லை. என் கையில் வளையலைப் பார்த்தாயா? நான் உன் வீட்டில் புகுந்ததைக் கண்டாயோ? உன் மகளைப் பேர் சொல்லி அழைத்ததைப் பார்த்தாயோ? வந்து கையில் வளை கழற்றினதைக் கண்டாயோ? அப்படிக் கண்டிருந் தால் உன் மகள் வளையை அப்போதே பிடுங்கிக் கொள்ள லாமல்லவா? என்றாற்போல வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போய், நான் மறுநாக்கெடுக்க முடியாதபடி பண்ணிச் சிரிக்கின்றான்' என்று புகார் செய்கின்றாள் இந்த இடைச்சி.