பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் விளைத்த சிறு குறும்புகள் 119 சொல்லில் அரசிப் படுதி, நங்காய்! சூழல் உடையன்உன் பிள்ளை தானே இல்லம் புகுந்தென் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையில் கின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத் திக்கு அவ் வளைகொ டுத்து கல்லன நாவற் பழங்கள் கொண்டு ‘நானல்லேன்' என்று சிரிக்கின்றானே அரசிப்படுதி.சீற்றங்கொள்ளுகின்றாய்; சூழல் - வஞ்சகச் செயல்கள்.) என்ற பாசுரத்தில் இந்த நிகழ்ச்சியை அநுசந்தித்து மகிழ் கின்றார் ஆழ்வார். இங்ங்ணம் தாயாக நின்று அநுபவிக்கும் கண்ணனின் சிறு குறும்புகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளு கின்றன. அன்னையின் அன்பு ஆழங்காண முடியாத மாக்கடல், காதலர்களின் காதலைப் போல் கொந்தளித்து அலையெறியும் மாக்கடல் அன்று, சாந்தமான.துாய்மை யான-ஒளி மயமான மாக்கடல். இந்த விதமான அன்புக் கடலில் விளைந்தவை விஷ்ணுசித்தரின் பல பாசுரங்களும் பக்தி அநுபவங்களும். அவற்றில் ஆழங்கால் பட்டு தம்முடைய பக்திப் பயிரை வளர்ப்போம்; பக்தி அதுபவங் களில் திளைப்போம். இந்நிலையில், மருவும் கின்திரு நெற்றியில் சுட்டி அசைத ரமணி வாயிடை முத்தம் தருத லும்உன்தன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண் டுள்ளமும் குளிர விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளி யாய்கின்றுரைக்கும் அவ் வுரையும் திருவி லேன் ஒன்றும் பெற்றிலேன்; எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற்றாளே, (பெரு.திரு.5) என்ற பாசுரத்தின் அநுபவத்திலும் ஆழங்கால்பட்டு மகிழ் கின்றோம். .