பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கண்ணனின் தீரச் செயல்கள் எம்பெருமானை அநுபவித்தல் பலவகைப்பட்டிருக்கும். அவனுடைய திருநாமங்களைச் சொல்லியநுபவித்தல், அவனுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லி யதுபவித்தல், அவனுடைய வடிவழகைச் சொல்லி அநுபவித்தல், அவனுடைய தீரச்செயல்களைச் சொல்லி யதுபவித்தல், திவ்விய தேசங்களின் வ ள ங் க ைள ச் சொல்லியநுபவித்தல், அங்கே அபிமானமுள்ள பூரீவைண வர்களின் பெருமையைப் பேசி அநுபவித்தல்-என்றிப் படிப் பலவகைப்பட்டிருக்கும் பகவதநுபவம். கிருஷ்ண பக்தியில் சிறந்தவர் பெரியாழ்வார்; குறிப்பாக அவன் சிறுவனாக இருந்தபொழுது அவன் ஆற்றிய தீரச் செயல்களில் ஆழங்கால்பட்டு மகிழ்ந்தவர். இத்தகைய தீரச் செயல்கள் சிலவற்றில் நாமும் ஆழங்கால் படுவோம். இத்தீரச் செயல்கள் அதிமாதுஷ்ய சேஷ்டிதங்கள்" என்று குறிப்பிடுவர் வைணவப் பெருமக்கள். தமிழர்கள் இதைச் சிறு சேவகங்கள் என்று குறிப்பிடுவர். 1. பூதனை வரலாறு : கம்சன் ஆக ய வ | ணரி சொன்னதைக் கேட்டது முதல், தேவகியின் கருப்பம் பிறந்ததும் அப்போதைக்கப்போது அழித்து வருகின்றான். எம்பெருமானது யோக நித்திரையால் பிறந்த கன்னிகை யைக் கொல்ல முயன்றபோது அக்கன்னிகை உன்னைக் கொல்லப் போகின்றவன் ஒளித்து வளர்கின்றான் என்று சொல்லியதைக் கேட்டது முதல் கண்ணன்மேல் சினங் கொண்டு அவன் பால்மணம் மாறாத பாலகனாக இருக்கும்