பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 விட்டு சித்தன் விரித்த தமிழ் கண்ணனைத் தொட்டிலிலிட்டுக் கண் வளர்த்தி விட்டு யசோதை யமுனைக்கு நீராடப் போயினாள். கம்சனால் ஏவப்பெற்ற அசுரன் ஒருவன் அச்சகடத்தில் வந்து ஆவே சித்து குழந்தைக் கண்ணன்மீது விழுந்து கொல்ல முயன் றதை அறிந்த பகவான் பாலுக்கு அழுகின்ற பாவனையில் தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்தருள, அவ்வுதைபட்ட மாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரன் உட்பட அழிந்தது. நாள்கள்.ஓர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை கிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய் வாள்கொள் வளைஎயிற்று ஆருயிர் வவ்வினான் (1,2:11) iநிமிர்த்து.துரக்கி; சகடம்.வண்டி, சாடிப்போய்உதைத்து, வாள்-ஒளி; வளைஎயிறு.கோரப்பற்கள்; வவ்வினான்.கவர்ந்தான்.: என்ற பாசுரத்தில் இந்த வரலாறு அநுசந்திக்கப்பெறு கின்றது. நாளைந்து - நாலு அல்லது ஐந்து மாதத்திற் குள்ளே என்றும், (நாலு மாதம் கூடின) ஒன்பது மாதங் களுக்குள்ளே என்றும், (நாலால் பெருக்கப்பெற்ற ஐந் தாகிய) இருபது மாதங்களுக்குள்ளே என்றும் பொருள்படும். இல்வாழ்வார் மங்களாசாசனம் செய்வதையே தம் பணி யாகக் கொண்டிருப்பதால் சிறிய வயதிலேயே அரிய பெரிய செயல்களை ஆற்றினான் என்று சொன்னால் கண்ணெச்சில் படும் என்று அஞ்சி அங்ங்ணம் நிகழாமைக்காக மாதம் நாலென்றும் ஐந்தென்றும் ஒன்பதென்றும் இருபதென்றும் தெரியாதபடி மயங்க அருளிச் செய்தார் என்று ரசோக்தி யாக அருளிச் செய்வர் பூருவர்கள். இன்னோர் இடத்தில் இந்த நிகழ்ச்சியை,