பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் H23. கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச்சகடு கலக்கு அழிய பஞ்சி யன்ன மெல்லடியால் பாய்ந்தபோது கொந்திடும் என்று அஞ்சினேன் காண்! (2.2:4) (புணர்க்கப்பட்ட - ஏற்படுத்தப்பெற்ற, கள்ளம். வஞ்ச கம்; கலக்கு அழிய-குலைந்து போகும்படி; பாய்ந்த போது.உதைத்தபோது; நொந்திடும்நோவுபடும்; என்று அதுசந்திப்பார். இங்ங்னமே பல பாசுரங்களில்? இந்நிகழ்ச்சி குறிப்பிடப் பெறுகின்றது. 3. சாந்து பெற்றுக் கூன் நிமிர்த்தது: அக்ரூரன் பலராமன், கண்ணன் ஆகிய இருவரையும் கூட்டிக் கொண்டு மதுரையில் புகுந்து போகும்போது இராசவீதியில் ஒரு கூனியைக் கண்டனர். கண்ணன், யாருக்கு இந்தச் சாந்து கொண்டு போகின்றாய்?" என்று கேட்டருள, அந்தக் கூனி இவ்வாறு காதலுடையவன்போலக் கண்ணன் அருளிச் செய்தது கேட்டு அவனது திருமேனியழகிலும் திருக்கண் நோக்கிலும் மனம் ஈர்க்கப்பெற்று, அழகனே, நான் கம்சனுக்கு சந்தனம் முதலிய பூச்சுகள் சித்தம் செய்யும் பணிப்பெண்; என் பெயர் நைகவக்கிரை. இஃது உனக்குத் தெரியாதா?' ' என்று பதிலிறுத்தாள். கண்ணன், :எங்கள் திருமேனிக்கு ஏற்ற வெகு நேர்த்தியான இந்தப் பூச்சை எங்கட்கும் நல்க வேண்டும்' என்று கேட்டவுடனே, அவளும் அப்படியே திருவுள்ளம் பற்றுங்கள் என்று மிக்க அன்புடனும் ஆதரத்துடனும் பூச்சைத் தந்தாள். அப்பூச்சை பல ரா ம னு ம் கண்ணனும் அணிந்து கொண்டனர். கண்ணன் 'இவள் பயன்கருதாது தந்தாள்' என்று உகந்து, அவள் முதுகில் வேர் விழுந்ததோ 2. பெரியாழ். திரு: 2.4:4; 2:5:2:28:7, 3 1:2, 3.9:9 காண்க,