பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 விட்டு சித்தன் விரித்த தமிழ் என்னும்படி உறைந்து கிடந்த கூனை நிமிர்த்து விடுவதற்குத் திருவுள்ளம் பற்றி, நடுவிரலும் அதற்கு முன்விரலும் கொண்ட துணிக் கையினால் அவளை மேல்வாய்க் கட்டையிற் பிடித்துத் தன் திருவடிகளினால் அவள் கால்களை அமுக்கி இழுத்துத் தூக்கிக் கூன் உடலுக்குள் அடங்கி விடும்படி கோணல் நிமிர்த்தி அவளை மகளிற் சிறந்த உருவிளைாக்கினன் என்பது வரலாறு. இதனை விஷ்ணு சித்தர், நன்றிய சாந்தம் நமக்கிறை கல்கென்ன தேறி யவளும் திருவுடம்பிற் பூச ஊறிய கூனினை உள்ளே யொடுங்க அன்(று) ஏறி உருவினாய் (19:4) fதாறிய-நறுமணம் வீசும்; சாந்தம்-சந்தனம்; இறைசிறிது; நல்கு-கொடு; தேறி.தெளிந்து; திருவுடம்புதிருமேனி, ஊறிய-நீண்ட நாட்களாக இருக்கும்; ஒடுங்க-அடங்கும்படி; ஏற உருவினாய்-நிமிர்த்து உருவினவனே) என பாசுரத்தில் அது சந்தித்து அகமகிழ்கின்றார். 4. வில் விழவு அழித்தது: கண்ணனும் பலராமனும் திருவாய்ப்பாடியில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது கம்சன் தனது நகரமான மதுரையில் தான் வில் விழா ஒன்று எடுப்பதாகத் திட்டமிட்டு அதைக் காண்பதற்காக இந்த இரண்டு சிறுவர்களையும் அழைத்துவரும்படி அக்ரூரரை அனுப்பினான். அவர் ஆயர்பாடி சென்று அவ்விருவர்களையும் அழைத்து வர, அவர்கள் வட மதுரையில் வந்து சேர்ந்தனர். கண்ணன் கம்சனுடைய வஞ்சத்தை அறிந்தவனாகையாலே வில்விழா நடைபெறும் ஆயுதசாலையில் புகுந்து, இவனுக்கு வில்லொருகேடு, விழாவொருகேடு என்று சொல்லி, அந்த வில்லை எடுத்து முறித்தெறிந்தனன். -