பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் #25. "திருமதுரையில் சிலைகுனித்து (திருப்பல்-10) என்பதனால் அறியலாம். 5. குவலயாபீட வதம்: வில்விழாவைக் காரணமாகக் கொண்டு கம்சன் அனுப்பிய அழைப்பின்படி பலராமனும் கண்ணனும் அக்ரூரருடன் வந்து கொண்டிருக்கையில் அரண்மனைக்கு வரும் வழியில் சிறுவர்கள் இருவரையும் கொல்லுவதற்கு குவலயாபீடம் என்ற ஒரு மதயானை ஆயுதம் தாங்கிய பாகனுடன் கம்சனின் ஏவலின்படி நிறுத்தி வைக்கப் பெற்றிருந்தது. இவர்களை நோக்கி யானை பாய்ந்து வர, யாதவ வீரர்கள் இருவரும் அதனை எதிர்த்து அதன் கொம்புகள் இரண்டையும் சேற்றிலிருந்து. முள்ளங்கியை எடுப்பதுபோல் எளிதிற் பறித்து. அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அவற்றால் அடித்து, யானையையும் பாகனையும் உயிர் தொலைத்தனர். இதனை ஆழ்வார், பொருகரியின் கொம்பு ஒசித்தாய் (2.7:5) என்றும், கும்பக் களிறு ஆட்டகோவே! (2.8:8) என்றும், கஞ்சன்தன் ஒருவாரணம் உயிர்உண்டவன் (4.2:5) என்றும், வில்பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல்இருந் தவன்தலை சாடி (4.7:7) என்றும் ஆழ்வார் அநுசந்தித்து மகிழ்கின்றார். 6. மல்லர்களை மாய்த்தது: யானையையும் பாகனை யும் கொன்று சிறுவர்கள் அரண்மனையினுள் நுழையும் பொழுது, ஒருகால் யானைக்கும் பாகனுக்கும் தப்பி உள்ளே வந்தால், அவர்களை எதிர்த்துக் கொல்லும்படி