பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் 129 சுருள்உடைய பொழில்மருதும் கதக்களிறும் பிலம்பனையும் கடிய மாவும் உருள்உடைய சகடினையும் மல்லரையும் உடையவிட்டு ஓசை கேட்டான் (4.9:3) (சுருள் . சீற்றம்; மருது . இரட்டை மருத மரங்கள்: கதம் களிறு . குவலயாபீடம்; பிலம்பன் . பிரலம் பாசுரன்; கடியமா - குரூரனான குதிரை வடிவாய் வந்த கேசி, சகடு - சகடாசுரன்; மல்லர் . சானுர ரன், முஷ்டிகன்: உடைய விட்டு - கொன்று: ஒசை - புகழ்! என்பது பாசுரம். இதில் நளகூபர மணிக்ரீவர்கள், குவல யாபீடம், சகடாசுரன், மல்லர்கள் . இவர்கள் 6նյր லாற்றுடன் பிரலம்பன் வரலாறு கலந்து அதுசந்திக்கப் பெறுகின்றது. - 10. மருதம் இறுத்தது : குழந்தைப் பருவத்தில் கண்ணன் துன்பத்துக்குள்ளாக்கும் பல திருவிளையாடல் களைப் புரியக் கண்டு சினங் கொண்ட யசோதைப் பிராட்டி அவனைத் திருவயிற்றிற் கயிற்றினால் கட்டி ஒர் பொத்த உரலில் பிணித்துவிட்டாள். கண்ணன் அவ்வுரலை இழுத்துக்கொண்டு தவழ்ந்து அவண் இருந்த இரட்டை மருத மரத்தின் நடுவே எழுந்தருள, அவ்வுரல் குறுக்காக நின்று இழுக்கப்பெற்றதனால் அம்மரங்கள் இரண்டும் முறிந்து விழுந்தன. உடனே முன் ஒருகால் நாரத முனிவரின் சாபத்தால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன், மணிக் கிரீவன் என்னும் குபேர புத்திரர்கள் இருவரும் சாபந் தீர்ந்து சென்றனர். இதனை விஷ்ணுசித்தர், பேயின் முலையுண்ட பிள்ளை இவன்முன்னம் மாயச் சகடும் மருதும் இறுத்தவன் (2.5:2) பேய் - பூதனை சகடு - வண்டி மருது - மருத மரங்கள், இறுத்தவன் - ஒடித்தவன்) வி. 9