பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 விட்டு சித்தன் விரித்த தமிழ் என்ற பாசுரத்தில் அநுசந்திக்கின்றார். பின்னுமொரு பாசுரத்தில் இந்நிகழ்ச்சியை, கள்ளச் சகடும் மருதும் கலக்கழி யஉதை செய்த பிள்ளை பரசே! நீபேயைப் பிடித்து முலையுண்ட பின்னை (2.8:7). |கள்ளம்.வஞ்சனை, சகடு.வண்டி, கலக்கு அழிய. கட்டுக்குலைந் தழியும்படி: பிள்ளை அரசே. பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே; பேய்-பூதனை) - - என்பது பாசுரம். இதில் சகடாசுரன், பூதனை வரலாறு களுடன் கலந்து அநுசந்திக்கின்றார். இன்னும் வேறு பாசுரங்களிலும் இந்நிகழ்ச்சி அநுசந்தானம் ஆகின்றது. 1 . . பகாசுரன் வரலாறு : பகாசுரன் என்பவன் கிருஷ்ணனைக் கொல்லுமாறு கம்சனால் ஏவப்பெற்ற அசுரர்களில் ஒருவன். இவன் பெரியதொரு கொக்கின் வடிவங்கொண்டு வழக்கமாகக் கண்ணனும் அவன் தோழர் களும் மாலையில் கன்று காலிகளை ஒட்டிக்கொண்டு வீடு திரும்பும் ஓர் ஒற்றையடிப் பாதையருகில் காத்திருந்தான். அவ்வழியாக வரிசையாக வரும் கன்றுகளை ஒவ்வொன் றாக விழுங்கிவிட்டான்: கண்ணனின் தோழர்களையும் ஒவ்வொருவராகக் கபளிகரம் பண்ணிவிட்டான். இறுதி யாக வந்தவன் கண்ணன். அவனையும் அலகால் கொத்தி விழுங்கினன். கொக்கின் வயிற்றின் உள்ளே செல்லும் கண்ணன் அசுரன் வயிற்றில் நெருப்புபோல் எரிந்தான். அசுரன் அதனைப் பொறுக்கமாட்டாமல் கண்ணனை உமிழவே, அவன் வெளியில் வருங்கால் தன் இரு கைகளாலும் இரண்டு அலகுகளையும் பிடித்துக்கொண்டு வெளியே குதித்துக் கொக்கினை இருகூறாகக் கிழித்து 3. பெரியாழ். திரு. 1.2:10; 1.5:5 என்பன காண்க.