பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் 131 அனைவரையும் விடுவித்தான். இச்செயலைத் திருமங்கை யாழ்வார், - புள்வாய்ப் பிளந்த புனிதா! (7.1:4) என்று அநுசந்தித்து அகமகிழ்கின்றார். புள்ளின் வாய்க் கீண்டானை (திருப். 13)-(கிண்டல்.பிளத்தல்)-என்று ஆண்டாள் ஆழங்கால்படுகின்றார். இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் (திருவாய். 6.4:6) என்று இதனை அநுபவித்து மகிழ்கின்றார் நம்மாழ்வார். பள்ளத்தில் மேயும் பறவை உருக்கொண்டு கள்ள அசுரன் வருவானைத் தான்கண்டு :புள் இது' என்று பொதுக்கோ வாய்கீண்டிட்ட பிள்ளை (2.5:4). |பள்ளத்தில் மேயும் பறவை.கொக்கு; பொதுக்கோ. பொதுக்கென; கீண்டிட்ட. பிளந்த) என்று பெரியாழ்வார் ஆழங்கால் பட்டுப் பெரிதும் மகிழ் வதையும் எண் ணி மகிழ்கின்றோம். - - 12. வையம் ஏழும் உண்ட வரலாறு : ஒருநாள் கண்ணன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனன்; கண்ணன் மண்ணைத் தின்றதாகப் பலராமன்மூலம் கேள்வி யுற்ற யசோதைப்பிராட்டி ஓடிப்போய்க் கண்ணனை வாரி எடுத்துக்கொண்டு இல்லத்தினுள் ஏகி, ஏன் மண்ணைத் தின்றாய்?" என்று அச்சுறுத்தினாள். கண்ணனோ அம்மா நான் மண்ணைத் தின்னவில்லை; அண்ணன் வேண்டு மென்றே கோள் சொல்லுகின்றான்; என் வாயைப் பார்!! என்று வாயைத் திறந்து காட்டினன். யசோதை அந்த வாய் வழியாகக் கண்ணனின் திருவயிற்றில் வையம் ஏழினையும் கண்டு வியப்புற்றாள். இவன் ஆயர் மகன் அல்லன்; கருந்தெய்வம்' என்று அறுதியிட்டனள், சிறிது நேரத்தில் அந்த மயக்கநிலை மாறித் தன்னுடைய மகனாகவே எண்ணிக் கொண்டாள். இந்த நிகழ்ச்சியை விஷ்ணுசித்தர்,