பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 விட்டு சித்தன் விரித்த தமிழ் கையும் காலும் கிமிர்த்துக் கடாரநீர் பைய ஆட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால் ஐய நாவழித் தாளுக்கு அங்காந்தி வையம் ஏழு கண்டாள் வாயுளே (1.1:6). என்ற பாசுரத்தில் அநுசந்திக்கின்றார். ஆனால், கண்ண னாகிய குழந்தையை நீராட்டி நா வழிக்க முயலுங்கால் இக் காட்சியைக் கண்டதாக அதுசந்திக்கின்றார். கண்ணன் பார்த்தனுக்கு ஞானக்கண்ணைக் கொடுத்துத் தன் பேருரு வத்தைக் காட்டியதைப்போல, யசோதைப் பிராட்டிக்குத் தன்னுடைய தெய்வத்தன்மையைக் காட்டவேண்டுமென்ற பேரவாவினால் இங்ங்னம் செய்தனன் போலும். கண்ணன் முலைப்பால் உண்ணும்போது கொட்டாவிவிடுவது போல் வாயைத்திறந்து தன் பேருருவம் காட்டினதாகவும் சில புராணங்கள் கூறும். - 13. கன்றினால் விளவெறிந்தது: கம்சனால் ஏவப் பெற்ற கவித்தாசுரன் விளாமரத்தின் வடிவாய்க் கன்று மேய்க்கும் கண்ணன் தன் கீழ்வரும்போது அவன்மேல் விழுந்து கொல்லுவதாக எண்ணி வந்து நிற்கின்றான். அவ்வாறே வத்சாசுரன் என்பான் கண்ணனை முட்டிக் கொல்லும் பொருட்டுக் கன்றின் வடிவமாக வந்து காத்திருக்கின்றான். இதனை நன்கு அறிந்த கண்ணன் அக் கன்றின் கால்களைப் பற்றிச் சுழற்றி விளாமரத்தின் மீது தாக்குகின்றான். இருவரும் சிதைந்து தமது அசுர வடிவத்துடன் விழுந்து மடிகின்றனர். இந்த நிகழ்ச்சி யினைப் பெரியாழ்வார், - கானக வல்விளவின் காய்உதி ரக்கருதிக் கன்றது கொண்டெறியும் கருகிற என்கன்றே! ... " (1.5:4) |கானகம்.காடு; வல்விளவு.வலிமை பொருந்திய விளாமரம்) - - - என்று அதுசந்தித்து அகமகிழ்கின்றார். மேலும், இதே நிகழ்ச்சியில், - - ...