பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் 135 ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்குமுன் தந்த அந்தணன் ஒருவன் "காதல் என்மகன் புகல்இடம் காணேன்: கண்டுரீ தருவாய் எனக்கு என்று கோதில் வாய்மையி னான்உனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய் - (5.8:7) ஒது.ஓதி உணர்தற்குரிய, கோது இல்-குற்றம் இல்லாத, அந்தணன்.சாந்தீபினி; புகல் இடம். சென்ற இடம்) என்று ஆழங்கால்பட்டு அநுபவிப்பர். கடலில் மூழ்கின குமாரனை மீட்டுக் கொடுத்தருளியதுபோல, சம்சாரி சாகரத்தில் மூழ்கிய என்னை மீட்டுப் பாதுகாத்தருள் வேண்டும்’ என்பது இப்பாட்டுக்குக் கருத்தாகக் கொள்ள பெறும். 15. சீமாலிகன் வரலாறு: மாலிகன் என்பான் கண்ணபிரானின் உயிர்த் தோழனான ஒர் இடையன். மேன்மைப் பொருளைத்தரும் (g) என்ற சொல் (சீ) எனத் திரிந்து வந்து ஓர் சீமாலிகன்’ என்று அவன் பெயரோடு அமைந்து கிடக்கின்றது. இவன் கண்ணபிரானிடம் பல விதமான ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றவன். ஒருவருக்கும் அஞ்சாமல் தன்முனைப்புக்கொண்டு சாதுசனங்களை இம்சித்துக் கொண்டிருந்தான். இதைக் கேள்வியுற்ற கண்ணன் மிக வருந்தி நண்பனாகிய இவனைக் கொல்வது தகாது; ஏதாவது செய்தேயாக வேண்டும்' என்று எண்ணி, ஒரு நாள், நீ இப்படிச் செய்வது தகாது" என்று அறிவுரை வழங்கினான். அசுர இயல்புள்ள அந்த மாலிகனும் தன் வாயில் வந்தபடி பிதற்றி நீ எல்லா ஆயுதங்களையும் கையாளும் முறையைக் கற்பித்தாய்; திருவாழிப் பயிற்சியை மட்டிலும் கற்பித்தாய் இல்லை' என்று கண்ணன் மீது குறை கூறினான். கண்ணனும் இதில், பழகுவது உனக்கு