பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

išé விட்டு சித்தன் விரித்த தமிழ் முடியாது; எனக்கே அச்ாதாரணம்ானது' என்று சொல்ல, அவனும் என்னால் முடியாததும் ஒன்று உண்டோ? நீ அவசியம் அப்பயிற்சியைக் கற்பித்தே ஆகவேண்டும்' என நிர்ப்பந்தித்தான். கண்ணன் அவனை யொழிக்க *இதுதான் சமயம்' என்று திருவுள்ளம் கொண்டான். சக்கரப்படையை எடுத்துத் தன் ஒற்றை விரலால் சுழற்றி மேலெறிந்து கையிலேற்றிக் காட்டினான் கண்ணன். :இஃது எனக்கு அரிதாமோ?" என்று மாலிகன் சொல்ல, **ஆம்; இஃது உனக்கு அரியதாயாகும்’ என்று கண்ணன் வற்புறுத்திச் சொல்லவும் அதனை அவன் கேளாமல் அத் திருவாழியை வாங்கிச் சுழற்றி எறிந்து பிடிப்பதாக தினைத்துத் தன் கைவிரலைக் கழுத்துக்கு அடுத்து வைத்துக் கொண்டு நின்றான். அப்போது அத்திருவாழி சுழன்று வருவதற்கு இடம் போதாமையால் அதன் வீச்சு இவன் கையில் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து விட்டது என்பது கதை. இவ்வரலாறு எந்தப் புராணத் திலும் காணப்படாதது. வான்மீகி முனிவர் நான்முகன் வரத்தினால் பகவதவதார வரலாறுகளைத் தாமாகவே நேரில் கண்டது போலவே, ஆழ்வார் பெருமக்களும் தாமாகவே கண்டவற்றில் இவ்வரலாறும் ஒன்று என்ப தாகக் கொள்வர் பெரியோர். பெரியவாச்சான் பிள்ளையும், இத்திருமொழியின் எட்டாம் பாசுரத்தின் வியாக்கியானத்தில் இதைத் தெளிவாக அருளிச் செய் துள்ளமை காணத்தக்கது. இந்த வரலாற்றை விஷ்ணுசித் தரும், சீமா லிகன்.அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமா றவனைரீ எண்ணிச் சக்கரத் தால்தலை கொண்டாய் ஆமா றியும் பிரானே' (2.7:8) (தோழமை-நட்பு; சாம் ஆறு.செத்துப் போகும் வழி; எண்ணி.ஆலோசித்து; தலை கொண்டாய்.