பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பூரீ : பூரீசெளமிய நாராயணாய நம : அணிந்துரை (திரு. க. பத்மநாபரெட்டியார் பெருவள நல்லூர்| குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று கூடி யாடி விழாச்செய்து திருந்து நான்மறை யோர்இராப்பகல் ஏத்தி வாழ்திருக் கோட்டியூர்க் கருந்தடமுகில் வண்ண னைக்கடைக் கொண்டு கைதொழும் பக்தர்கள் இருந்தவூரில் இருக்கும் மானிடர் எத்த வங்கள் செய் தார்கொலோ: 4 -பெரியாழ்வார். விட்டுசித்தன் விரித்த தமிழ் என்னும் நூலின் ஆசிரியர் பேராசிரியர் டாக்டர் க. சுப்புரெட்டியார் அவர்களைக் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் கூறு நல்லுல கமும் கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு. காலமாக வைணவ உலகமும் நன்கு அறியும். இவர் கற்றுத்துறை போய வித்தகர்; கணக்காயர். எழுபது அகவையைத் தாண்டி நிற்கும் இப்பெரியார் பல பட்டங்கள் பெற்றிருந்தா லும் உன்னுகின்ற போதெல்லாம் இன்பம் நல்கும் ஒப்பற்ற திருவாய்மொழியை இனிதேயாய்ந்து தத்துவம் கண்டு டாக்டர் பட்டம் பெற்றது இவர் பெற்ற பட்டங்களின் மணி முடியாகும். ஆசிரியம், இலக்கியம், சமயம், திறனாய்வு 4. பெரியாழ். திரு. 4.4:7