பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi அறிவியல் முதலிய பல துறைகளில் எழுதிய 78 நூல்களில் 12 நூல்கள் வைணவ சமய-தத்துவங்களைப் பற்றியவை. இவற்றுள் எட்டு நூல்கட்குச் சென்னைப் பல்கலைக்கழகம்: தமிழக அரசு, தமிழ் வளர்ச்சிக்கழகம் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. அண்மையில் (மார்ச்சு . 1987) பண்ணுருட்டி பூரீமத் ஏ. வே. வி. இராமாநுச நாவலர் சபை தமது 62-வது பூரீ வைணவ மாநாட்டில் இவர்தம் வைணவத் திருத்தொண்டினைப் பாராட்டும் முகத்தான் ஆரீ சட கோபன் பொன்னடி என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தமை இவர் பெற்ற பெரும்பேறாகும். திருப்பதியில் தம் முயற்சி வால் தமிழ்த்துறையைத் தோற்றுவித்து நன்கு வளர்த்து ஆற்றிய பணி பொன்னெழுத்துகளால் போற்றத்தக்கது; அறிஞர் உலகத்தால் பாராட்டத்தக்கது. இப்போது பெரியாழ்வார் திருமொழியை நன்கு ஆய்ந்து பொதுவிருப்பார்வ நூலாக வழங்குகின்றார். இது பொதுமக்களுக்கு நல்விருந்து; வைணவ உலகிற்கும் பெரு விருந்து. பெரியாழ்வாரைப்பற்றி இவர் விரித்துரைக்கும் கருத்துகள் படிப்போரின் மனத்தில் பாங்குறப் படிவதற்கு இவர் வகுத்துக்கொண்ட இந்நூலின் பதினான்கு இயல் களும், சரளமான தீந்தமிழ் நடையும், கருத்துகளைத் தெளிவாக விளக்கும் போக்கும் கைகொடுத்து உதவு கின்றன. - * * - - - - - சைவசமயத்தைச் சார்ந்த இப்பெருமகனார் பதி னான்கு இயல்களாக நடைபெறும் இந்தப் பனுவலில் சமயக் காழ்ப்பின்றி பொதுநோக்கோடு உண்மையை உணர்ந்து பெரியாழ்வாரைப் பற்றிய பல கருத்துகளையும் வைணவக் கொள்கைகளின் நுட்பங்களையும் சம்பிரதாய மரபு கெடாது இயன்ற அளவு வைணவ நடை கலந்து. உணர்த்தும் திறன் அனைவராலும் போற்றத் தக்கதாகும்; வைணவப் பெருமக்களாலும் பாராட்டத்தக்கதாகும். அவற்றுள் சில: < - . . . . . o (1) பல சுருதிப் பாசுரம் ஒன்றில் வரும் விட்டு சித்தன் விரித்தமிழ் 3:6:11) என்ற சொற்.