பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii றொடரையே நூலின் பெயராக இட்டு ஆசிரியர் வழங்கியமை நூலிற்குக் கவர்ச்சியுடைய பெயராக அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். (2) ஒரு மகள் தன்னையுடையேன்" (3.8:4) என்ற பாசுரத்தில் குறிப்பிடப்பெறும் ஒரே மகள் யார்?’ என்பதன் விளக்கம் (பக். 6) அற்புதமாக வுள்ளது. இஃது ஆண்டாளைக் குறிக்காமல் தாய்ப் பாசுரத்தில் குறிக்கப்பெறும் மகள்" என்று ஆசிரியர் விளக்குவது (பக். 245) பொருத்தமாக அமைந்துள்ளது. (3) பரத்துவ நிர்ணயத்தில் சமய சண்டமாரு தங்கள்... தருக்கப் புவிகள் வரையுள்ள பகுதி (பக். 13, 14) வாதச் சூழ்நிலையைக் காட்டி சொற்களின் ஒசையே வாதப் பிரதிவாதம் தொடங்கிவிட்டது போன்ற உணர்ச்சியை எழுப்பி விட்டுசித்தரின் வாதத் திறனையும் அற்புதமாகக் காட்டுவர். (4) திருப்பல்லாண்டு பதிகத்தில் செல்வத்தை விரும்புபவர்கள், கைவல்யத்தை விரும்புபவர்கள், எம்பெருமானின் அநுபவத்தைமட்டிலும் விரும்பு பவர்கள் (பக். 24) என்று மூன்று அதிகாரிகளைக் காட்டி இதன் விளக்கத்தை (பக். 33) தெளிவாக எடுத் துரைப்பது இவர்தம் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. - (5) திருப்பல்லாண்டு தனிப்பிரபந்தமா?' என்ற வினாவை எழுப்பி வடகலை, தென்கலை முறை அவரவர் நிலையை விளக்கி நடுவு நிலையில் நின்று ஆய்ந்து (பக். 51) வேயர்தங்கள் குலத்த: (5. 4; 11) என்ற பாசுரத்தில் கோயில் கொண்ட கோவலன்' என்ற தொடருக்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் செய்துள்ளதை எடுத்துக்காட்டி திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தம் அன்று என்று எவரும் ஒப்புக் கொள்ளும் முறையில் விளக்கியுள்ளமை இவர்தம் நியாய வாதத்தைக் காட்டுகின்றது. B