பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii (6) கண்ணனைப் பிள்ளைப் பெருமாள் என்று பெயரிட்டழைப்பது புதுமையாகவும், எவரும் வியந்து, உவந்து, ஏற்றுப் போற்றுவதுமாகவும் உள்ளது (இயல். 5). (7) பிள்ளைப் பெருமாளின் வளர்ச்சி நிலை களைப் பல பாசுரங்களைக் கொண்டு (பக். 75 - 103) பிற்காலப் பிள்ளைத்தமிழ்க் கூறுகளைச் சுவைபட விளக்கிப் பிள்ளைத் தமிழ் இலக்கியத்திற்கு வித்திட் டவர் விஷ்ணுசித்தரே என்று அறுதியிட்டுக் கூறுவது இவர்தம் ஆராய்ச்சித் திறனை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. - (8) கண்ணபிரானைக் குறித்து இவர்தம் விருந்தா வனம் எங்கும் செவிகளாய்...அடியார்களின் கொள்கை யாக மலர்த்துள்ளது (பக். 173 - 174) என்ற பகுதி யிலுள்ள விளக்கத்தில் ஒவ்வொரு சொற்றொடரும் கருத்தாழமும் சுவையும் மிக்கதாக உள்ளது. (9) பாசுரங்களில் அகப் பொருள் க ல ப் பு (இயல் - 12) என்ற பகுதியில் உள்ள ஆராய்ச்சி ஆசிரியரின் சொந்த சொத்து. அகத்திணைக் கொள்கைகள்', 'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை" என்ற இவர்தம் நூல்களே இதற்குச் சான்றுகளாக அமைகின்றன. அகப்பொருள் நுட்பங்கள் பக்தியாகப் பரிணமிக்கும் பொழுது எவ்வளவு உயர்நிலையை அடைகின்றன என்பதை விளக்கும் பாணியே இவர்தம் தனிச்சிறப்பாக அமைகின்றது. (10) பாசுரங்களில் படிமங்கள் (இயல் - 14) என்ற பகுதி மேனாட்டுத் திறனாய்வு முறையில் அமைந்துள்ளது. இதில் ஆசிரியரின் உளவியல் அறிவு கை கொடுத்து உதவியுள்ளது. இந்த இயல் இலக்கியத் திறனாய்வாளருக்கு ஒரு நல்ல விருந்து. ஆழ்வா ரிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தமையே இங்கனம் இவரைச் செயற்படச் செய்துள்ளது என்று கருதலாம்.