பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix இவற்றைத் தவிர வடமொழிப் பதங்களுக்குச் சரியான தமிழில் விளக்கம் கூறுதல் (பக். 20), பக்தியின் பெருமை (பக். 258 - 59), பிள்ளைகட்குத் திருநாமம் இடுதல் (பக். 259), அகத்தினை மரபுகள் (பக். 265), நாட்டுப் பாடல்களின் தாக்கம் (பக். 266) போன்ற பகுதிகளில் நல்ல விளக்கங்களைக் காண முடிகின்றது. கண்ணனின் சிறு குறும்புகள், தீரச் செயல்கள் என்ற பகுதிகள் ஆழ்வாரின் கிருஷ்ணாதுபவத்தைத் தெளிவாக விளக்கு கின்றன. - , ' , - - இங்ங்னம் பல்வேறு கோணங்களில் பெரியாழ் வாரையும் அவரது திருமொழிகளின் விளக்கங்களையும் காட்டி நமக்கு அரியதோர் பக்தி விருந்தாக அமைந்த இப்பனுவல் உள்ளபடியே விட்டுசித்தன் விரித்த தமிழே: யாகும். பெரியாழ்வாரைப் புரிந்து கொள்ள விழை வாருக்கு இஃது ஒர் திறனாய்வு விளக்கமாகும். இத்தகைய நல்லதோர் பனுவலைப் படைத்து அளித்த பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் நீலமேனி நெடியோனின் தண்ணரு ளால் நல்ல உடல்நலத்துடனும் மனவளத்துடனும் நோய் நொடியற்ற நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து நாட்டிற்கும், தமிழுக்கும், வைணவ சமயத் திற்கும் g சடகோபன் பொன்னடியாக, அருங்கலைக் கோனாகத், திகழ்ந்து தொண்டாற்ற வேண்டுமென்று அவன் திருக்கழலிணைகளை நினைத்து வணங்கி வாழ்த்து கின்றேன். பெருவள நல்லுரர் (வழி) பூவாளுர் திருச்சி மாவட்டம் பின்கோட் 621712 #987 ص 5ح6ة க. பத்மநாபன்