பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 விட்டு சித்தன் விரித்த தமிழ் காயும்நீர் புக்குக் கடம்புஏறி, காளியன் தீய பணத்தின் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயின் குழலூதி வித்தக னாய்கின்ற ஆயன் (2.1:3). (காயும்.கொதிக்கின்ற; புக்கு-புகுந்து, கடம்பு-கடம்ப மரம், பணம்-படம்: ஆர்க்க-ஒலிக்க; பாய்ந்து. குதித்து; வேயின் குழல்-மூங்கிலினாலாய குழல்.) என்று அநுசந்திக்கப்படுகின்றது. இவற்றைத் தவிர இன்னும் மூன்று பாசுரங்களில் இந்நிகழ்ச்சி போற்றி யுரைக்கப்பெறுகின்றது. 17. குருந்தம் ஒசித்தது: கண்ணனது பால சரிதங் களில் இதுவும் ஒன்று. இந்த வரலாறு இது: கண்ணன் யமுனையில் நீராடி நின்ற கோபியரின் துகில்களை ஒருங்கு வாரிக்கொண்டு, அந்நதிக்கரையில் இருந்த குருந்த மரத்தின் மீது ஏறப்போவதைக் கண்டறிந்தான் அசுரன் ஒருவன். இவன் கம்சனால் ஏவப்பட்டவன். இவன் கண்ணனை நலிவதற்காக அம்மரத்தில் ஆவேசித்துக் கிடந்தான். இதனை அறிந்த கண்ணன் அம்மரத்தை முறித்துப் போகட்டான் என்பது புராண வரலாறு. பெரியாழ்வார் இதனை, குருந்த மொன்றொசித் தானொடும் சென்று கூடி பாடி விழாச்செய்து (4.4:7) Iஒசித்து-முறித்து விழா-உற்சவம். என்று அதுசந்திப்பார். இந்த வரலாறு பண்டைய தமிழ் நூல்களிலும் காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில், 5. பெரியாழ் திரு. 2.10:3; 3.6:4; 3.9:5, இறுதியாகக் குறிப்பிட்ட பாசுரத்தில் 1.9:3லுள்ள அடிகளே திரும்பவும் வருகின்றன. -