பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் i29, பரப்புற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும் கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தான் என்பரால்" என வருதல் காண்க. இதில் இரண்டாவதாகக் குறிப் பிட்டுள்ள பகுதிக்கு புனக்கொல்லையைச் சார்ந்தவிடத்து வஞ்சனையால் வந்து நின்ற குருந்தை முறித்த மாயவன்' என்று அடியார்க்கு நல்லார் பொருள் கூறுவர். *குருந்தொசித்த என்று மேற்காட்டிய ஆழ்வார் பாசுரத் தொடருக்கு அசுரா விஷ்டமான குருந்து' என்பது முன்னோர் வியாக்கியானம். - இந்த வரலாறு சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகத்தின் பாடலும் (209) அதற்கு நச்சினார்க்கினியரின் உரையும் சற்று வேறுவிதமாகச் சுட்டுகின்றன. ஒரு நாள் யமுனை ய்ாற்றில் (தொழுநையாற்றில்) நீரில் விளையாடிக் கொண்டிருந்த கோபியருடைய துகில்களையெல்லாம் விளையாட்டு நிமித்தம் கவர்ந்து கொண்டு கரையிலுள்ள குருந்த மரத்தில் ஏறி நின்ற கண்ணன், தம்முடைய முன்னோனான பலராமன் ஆங்கு வருதலையறிந்து தன் செயலை அவன் காணின் தமக்கு மிக்க பழியுண்டாகும் என்று நினைத்து, அக்குருந்த மரத்தை முறித்து யமுனை யாற்றில் விழச் செய்து, தான் கவர்ந்த துகில்களை நீரில் நின்ற அக்கோபியர் எளிதில் பெறும் வண்ணம் செய்த தன்றித் தானும் நீந்தி வேறிடம் சென்றான்' என்று சைனர் 6. சிலப். ஆய்ச்சியர் குரவை: கூத்துள் படுதல்: பாட்டு.3; உள்வரி வாழ்த்து-1.