பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆42 விட்டு சித்தன் விரித்த தமிழ் இவன் கட்டளைப்படியே ஒழுகவேண்டும்’ என்று அறுதி யிட்டனர். இங்ங்ணமிருக்கையில் இடையர்கள் ஆண்டு தோறும் நடத்துவதுபோல் வழக்கப்படி நடத்த வேண்டிய இந்திர பூசையின் நாள் வந்தது. பற்பல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றும் பூசைக்கு வேண்டிய பொருள்களும் சேகரிக்கப்படுவதைக் கண்டு கண்ணன், "ஓ பெரியோர்களே, நாமும் நம்முடைய பசுக்களும் எதனால் சீவிக்கின்றோமோ அதற்கே பூசை செய்வது பொருத்தம்; இக்கோவர்த்தன மலையே பசுக் களுக்குப் புல்லும் தண்ணிரும் நல்கிக் காப்பாற்றுகின்றது. ஆகவே, பூசையனைத்தையும் இம்மலைக்கே இடுங்கள்' என்று கூற, இடையர்களும் இதைக் கேட்டு அங்ங்னமே செய்ய, கண்ணனும் தானே ஒரு தேவதை உருவங் கொண்டு அவற்றை முற்றும் அமுது செய்தருளினான். இந்திரன் சினங்கொண்டு ஏழு மேகங்களையும் ஏவிக் கல்மாரி பெய்வித்தான். ஏழு நாட்கள் விடாத மழை. கண்ணன் கோவர்த்தன மலையைத் துக்கிக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லா உயிர்களையும் காத்தருளினன். இந்நிகழ்ச்சியை விஷ்ணுசித்தர், மலையை எடுத்து மகிழ்ந்துகல் மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய் (2.3:7). (மாரி - மலை; நிரை - கூட்டம்) என்று அதுசந்தித்து மகிழ்கின்றார். பிறிதொரு பாசுரத் திலும் இந்நிகழ்ச்சியில் ஆழங்கால் பட்டு மகிழ்கின்றார். ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம் கோனார்க்(கு) ஒழியக் கோவர்த் தனத்துச்செய் தான்மலை (4.2:4) [அமரர்தம் கோன் . இந்திரன்)