பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ண்ணனின் தீரச் செயல்கள் 143 என்றது காண்க. ஒரு பதிகம் முழுவதும் (3.5) இம்மலை சிறப்பிக்கப் பெறுகின்றது. வேறு பாசுரங்களும் உள்ளன.7 இக் கூறியவை யாவும் கண்ணன் சிறுவனாக இருந்த போது ஆற்றிய தீரச் செயல்கள்; இனி, அவன் வளர்ந்த பிறகு ஆற்றிய தீரச்செயல்களிலும் ஆழ்வார் ஆழங்கால் படுவதைக் காண்போம். 19. ஏழ்விடை அடர்த்தது: கும்பன் என்னும் இடையர் தலைவனது மகள் நப்பின்னை; இவள் நீளாதேவியின் அம்சம். பின்னையை மணம் செய்து கொள்வதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அசுர ஆவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணன் ஏழு திருவுருக் கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணம் செய்து கொண்டான். இந்த நிகழ்ச்சியைப் பெரியாழ்வார், கப்பின்னைதன் திறமா கல்விடை ஏழ்அவிய நல்ல திறல்உடைய நாதனும் ஆணவனே! (1.6:7) (நப்பின்னைதன் திறமா . நப்பின்னைப் பிராட்டிக் காக; விடை . எருது; அவிய முடியும்படியாக; திறல் . மிடுக்கு) - என்றும், ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி அடல்விடை ஏழினையும் வீயப் பொருது வியர்த்துகின் றானை (4.1:4) (ஆயர் மகள் - ஆயருடைய பெண் பிள்ளை (நப் பின்னை): பின்னைக்கு ஆகி நப்பின்னைக்காக; அடல் விடை - வலிய எருது, வீய முடியும்படி யாக; பொருது - போர் செய்து; வியர்த்து . வேர்வையுடன்) என்றும் அதுசந்தித்து அகமகிழ்கின்றார். 7. பெரியாழ். திரு. 1.5:2; 2,9:6; 3.4:4.