பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 விட்டு சித்தன் விரித்த தமிழ் 2.ே உருப்பிணி தி ரு ம ன ம் : விதர்ப்ப தேசத்தில் குண்டினபுரம் ஒரு பெருநகர், அங்குள்ள அரசன் பீஷ்மகன். அவனுக்கு உருக்மி என்ற மகனும், உருக்குமிணி என்ற மகளும் இருந்தனர். உருக்குமினி பெரிய பிராட்டியாரின் அவதாரம். இவளுக்கு வயது வந்ததும் கண்ணன் அவளைத் தனக்குத் திருமணம் புரிவிக்க வேண்ட, அவளுடைய தமையன் அவளைச் சேதி நாட்டு அரசன் சிசுபாலனுக்குக் கொடுக்க விரும்பினான். சி ன் னா ள் கழிந்தபின் உருக்குமினிக்குச் சுயம்வரம் கோடிக்கப் பெற்றது, எல்லா தாட்டு மன்னர்களும் குண்டினபுரம் வந்து சேர்ந்தனர். கண்ணனும் பலராமனும் சில யாதவ வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்தனர். திருமணத்திற்கு முதல் நாளன்று உருக்குமினியைக் கண்ணன் கடத்திக் கொண்டு போய். விட்டான். தந்தவக்ரகன் முதலிய பல அரசர்கள் போர் செய்ய எதிர்த்தனர். கண்ணனும் பலராமனும் அவர்களைப் புறமுதுகு காட்டி ஒடும்படி செய்தனர். பிறகு உருக்குமினிப் பிராட்டியின் தமையன் உருக்குமி தன் தங்கையை மீட்டுப் போகும் நோக்குடன் கண்ணனை எதிர்த்துப் போரிட, கண்ணன் அவனைத் தோற்கடித்து, அவனைப் பிடித்துத் தன் தேர்க்காலில் கட்டி, அப்பால் அவனது தலையைச் சிரைத் திட்டு அவமானப்படுத்தி அனுப்பினான். உருக்குமினியை விதிப்படித் திருமணம் செய்து கொண்டான். இந்த நிகழ்ச்சியில் ஆழ்வார், - உருப்பிணி கங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர்வந்து செருக்கு உற்றான் வீரம்சிதையத் தலையைச் சிரைத்திட்டான் (3.9:3) (விருப்புற்று.ஆசை கொண்டு; ஏக-செல்ல; செருக்கு. கர்வம்; சிதைய.கெடும்படி.) - - என்றும், -