பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் 145 உருப்பிணி நங்கைதன்னை மீட்பான்தொடர்ந் தோடிச்சென்ற உருப்பனை யோட்டிக்கொண்டிட்டு உறைத் திட்ட உறைப்பன் (4.3:1) |தங்கை.சிறந்தவள்; மீட்பான்-திருப்பிக் கொண்டு செல்ல; உருப்பன்."ருக்மன்'; ஒட்டிக்கொண் டிட்டு-ஒட்டிப்பிடித்துக் கொண்டு; உறைத்திட்ட பரிவப்படுத்தின; உறைப்பன் . மிடுக்கையுடைய கண்ணன்.: என்றும் ஆழங்கால் பட்டுத் தன்னையே மறக்கின்றார். 2! . பஞ்சவர்க்குத் தூதன் பாண்டவ தூதனாகக் கண்ணன் துரியோதனனிடம் சென்று அறம் வழுவிய உறவினர்களை வருத்திப் பலத்தாலே வாழ வேண்டும் என்று எண்ணியிருப்பது தகாது; இருவர்க்கும் உள்ள பாகங்களைப் பிரித்துக் கொண்டு இருவரும் ஒத்து வாழுங்கள்’ என்று முதலில் சொல்ல அதற்குத் துரியோதனன் சிறிதும் இசை யாமையால் பத்து ஊர்களையாவது கொடு என்று வேண்ட, அவன் அதற்கும் இனங்காமல் நான் ஊசி குத்தும் நிலமும் கொடேன்; பாண்டவர்கட்குத் தருமம் உண்டு; அவற்றின் பலன் சுவர்க்கமும் உண்டு; அவர்கள் அவற்றை அநுபவிக்கலாம்; அரசு எங்களுடையதே' என்று மறுத்து விட்டான். இதனால் சினமடைந்த கண்ணன் போரைத் தொடங்குவித்துப் பார்த்தனுக்கு தேர்ப்பாகனாகிப் போரில் வெற்றியும் கண்டான். இந்த நிகழ்ச்சியில் உள்ளத்தைப் பறிகொடுத்த ஆழ்வார், . சீரொன்று துதாய்த் துரியோ தனன்பக்கல் ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால் பாரொன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத் தேர்ஒன்றை ஊர்ந்தாற்கு (2.6:5) என்றும், -- வி. 10