பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #6 விட்டு சித்தன் விரித்த தமிழ் பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து (3.9:5) fகைசெய்து அணிவகுத்து.) என்றும், பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து (1.9:3) என்றும் அது சந்தித்து மகிழ்கின்றார். 22. பார்த்தன் தேரில் பாகனாய் கின்றது : பாண்டவர் துரியோதனாதியர் என்ற இரு வகுப்பினரையும் சந்து செய்விப்பதற்காகக் கண்ணன் துரியோதனாதியரிடம் துதாகச் சென்று, :பாண்டவர்களும் நீங்களும் பகைமையை விட்டிடுங்கள்; அரசில் இருவருக்கும் பாகம் உண்டு; ஆதலால் சமமாகப் பிரித்துக் கொண்டு சமாதானமாக ஆட்சி புரிந்து வாழுங்கள் என்று பலவாறாக அருளிச் செய்ய, அவர்கள் அதற்குச் சிறிதும் உடன்படாமல் வலிமை இருந்தால் போரிட்டு வெற்றி கொள்ளட்டும்; இந்த நாவலந்தீவு வீரர்க்கே உரியது' என்று மிக்க செருக்குடன் சொல்லி விட்டனர். கண்ணன் சினங்கொண்டு பாண்டவர் பட்சபாதியாயிருந்து அவர்கட்கு வெற்றி யுண்டாகும்பொருட்டுப் பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதியாகி, எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்' (பெரி. திரு. 2.10:8). இந்த நிகழ்ச் சியை ஆழ்வார், - தாரித்து நூற்றுவர் தந்தைசொற் கோள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாள பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி (1.7:6)