பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் 147 (தாரித்து . அங்கீகரியாமல்; உய்த்து - நடத்துவதாக வந்து, மண்ஆள. அரசு ஆள; பாரித்த-முயற்சி செய்த; தேர் உய்த்த.தேரை ஒட்டின, ! என்றும், காந்தகம் ஏந்திய கம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்செயற் காகித் தரணியில் வேந்தர்கள் உட்க விசயன் மணித்தீண்டேர் ஊர்ந்தவன் (1,10:4) (நாந்தகம்.வாள்; தனஞ்செயன்.பார்த்தன், தரணிபூமி; உட்க-கலங்கும்படி மணித்திண் தேர். அழகிய வலிய தேர்; ஊர்ந்தவன்.செலுத்தினவன்.) என்றும், மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன் சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற செங்கண் அலவலை, (2.1:2) | புரை.ஒத்த; தூற்றுவர்.துரியோனாதியர்; பட்டு. மரணமடைந்து; பார்த்தன் . அருச்சுனன்; சிலை. வில்; திண்தேர். வலிய தேர்; செம்கண்.சிவந்த கண்; அலவலை. அருச்சுனன் வெற்றியைப் புகழ்பவ னான கண்ணன்.) - 8. மாரதர் : தான் ஒரு தேரின் மேலிருந்து கொண்டு பல்லாயிரம் தேர் வீரர்களோடு பொருது வெல்லும் வல்லமையுடையவர் அதிரதர்; தான் ஒரு தேரின் மேலிருந்து பதினோராயிரம் தேர் வீரர்களுடன் பொருபவர் மகாரதர், ஒரு தேர் வீரரோடு தாமும் ஒருவராய் நின்று எதிர்க்க வல்லவர், சமரதர்; அங்ங்னமே பொருது தம் தேர் முதலிய வற்றை இழந்துவிடுபவர் அர்த்தர்தர்.