பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 விட்டு சித்தன் விரித்த தமிழ் என்றும் ஈடுபாடு கொண்டு தன்னை மறந்த நிலையில் இருப்பர். 23. கரகாசுரவதம்: எம்பெருமான் வராக அவதாரம் செய்து பூமிதேவியைக் கோட்டாற் குத்தி எடுத்த பொழுது, அவனுடைய தொட்டுணர்வால் பூமிதேவிக்கு மகனாகப் பிறந்தவன் நரகன். நல்ல நேரத்தில் பிறக்காதவனாதலால் அசுரத் தன்மை பொருந்தியிருந்தான். இவன் பிராக் ஜோதிலும் என்னும் நகரிலிருந்து கொண்டு சகல பிராணி களையும் நலிந்து வந்தான். தேவர், சித்தர், கந்தர்வர், இயக்கர் முதலியோரின் கன்னிகைகளை வன்முறையால் கவர்ந்து அவர்களை மணம் புணர்வதாகக் கருதி தன் மாளிகையில் சிறை வைத்திருந்தான். வருணனது குடை, மந்தரகிரியின் சிகரமான இரத்தின பர்வதம், தேவர் தாயான அதிதி தேவியின் குண்டலங்கள் இவற்றைக் கவர்ந் தவன். இந்திரனது ஐராவதத்தையும் அடித்துக் கொண்டு போகச் சமயம் பார்த்திருந்தான். இதை முன்னரே தெரிந்து கொண்டு அஞ்சி இந்திரன் கண்ணனைப் பணிந்து முறையிட்டான். இந்திரனது வேண்டுகோளால் கண்ணன் கருடனை வரவழைத்துப் பூமிப்பிராட்டியின் அம்சமான சத்தியபாமையுடன் கருடன் மேலேறி நரகன் வசித்த நகரை யடைந்து திருவாழியைப் பிரயோகித்து அவனது மந்திரியான முரன் முதலிய பல அசுரர்களையும் இறுதியில் அந்த நரகனையும் அறுத்துத் தள்ளி அழித்தொழித்தான். பல திசைகளிலிருந்து கொணர்ந்து சிறைப்படுத்தியிருந்த பதினாயிரத்தொருநூறு கன்னிகைகளையும் ஆட்கொண் டான். பின்னர் அதிதியின் குண்டலங்களை அத்தேவியிடம் சேர்ப்பிக்கும்பொருட்டு சத்யபாமையுடன் கருடன் மீதமர்ந்து தேவலோகம் சென்று ஒப்படைத்தான். இந்த வரலாறு ஆழ்வாரால், மன்னு கரகன்தன்னைச் சூழ்போகி வளைத்தெறிந்து கன்னி மகளிர்தம்மைக் கவர்ந்த கடல்வண்ணன் (4.3:3)