பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் தீரச் செயல்கள் 1.4% (மன்னு-நிலைபெற்றவனாகக் கருதிய; சூழ்போகி. ஆராய்ந்து; எறிந்து-ஆழியால் கொன்று; கன்னி மகளிர்.பதினாறாயிரத்து ஒரு நூறு பேர்.) என்ற பாசுரத்தில் அதுசந்திக்கப்படுகின்றது. 24. கற்பகத்தருவைக் கொணர்ந்தது: அதிதி தேவியின் குண்டலங்களைச் சேர்ப்பிப்பதற்கு கண்ணன் சத்தியபாமை யுடன் தேவலோகத்திற்குச் சென்றபொழுது, இந்திராணி சத்தியபாமைக்கு எல்லாவித உபசாரங்களையும் செய்த வன், தேவர்க்கே உரிய பாரிஜாத மலரை மானிடப் பெண் ணாகிய இவளுக்குத் தகாது என்று சமர்ப்பிக்கவில்லை. சத்தியபாமை அந்த மலரை விரும்பி தன் கணவனிடம், சநாதா, இந்தப் பாரிஜாத மரத்தை துவாரகைக்குக் கொண்டுபோகவேண்டும்' என்று விடுத்தவேண்டுகோளைக் கண்ணனின் திருச்செவிசாத்தினாள். கண்ணனும் அந்த மரத்தை வேருடன் பெயர்த்தெடுத்துக் கருடன் தோளின் மீது வைத்தருளினான். அப்போது இந்திராணி துரண்டி விட்டதனால் இந்திரன் மறித்துக் கண்ணனோடு போர் செய்தான். கண்ணன் தனது சங்கநாதத்தாலேயே இந்திரனை அவன் சேனையுடன் பங்கப்படுத்தி, பின்னர் பாரிஜாத மரத்தை துவாரகைக்குக் கொண்டு வந்து சத்தியபாமை வீட்டுப் புழைக்கடைத் தோட்டத்தில் நாட்டியருளினான். இந்த நிகழ்ச்சியை, கற்பகக் காவு, கருதிய காதலிக்கு இப்பொழு தீவன்’ என்று இந்திரன் காவினில் நிற்பன செய்து கிலாத்திகழ் முற்றத்துள் உய்த்தவன் (1.10:9) இந்திரன் காவினில்-இந்திரனுடைய உத்தியா வனத் தில்; காதலி.சத்தியபாமை; கற்பகக்காவு.கற்பகச் சோலை; முற்றம்.வீட்டு முற்றம்; நிற்பன செய்துஇருக்கும்படி செய்து.1