பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 விட்டு சித்தன் விரித்த தமிழ் என்ற பாசுரத்தில் அதுசந்திக்கின்றார். இந்திரன் காவு - நந்தவனம். மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், கல்ப விருட்சம், அரிசந்தனம் - என்ற தேவலோகத்து மலர் தரும் மரங்கள் ஐந்து. இந்த ஐந்தையும் சாதாரணமாகக் கல்பவிருட்சம் என்று வழங்குதலும் உண்டு. இங்கு பாரிஜாதத்தைக் கற்பகம் என்கின்றார். இம் மரங்களில் ஒவ்வொன்றுமே பெருஞ்சோலையாகத் தழைத்திருக்கு மாதலால் கற்பகக் காவு’ எனப்பட்டது அறிக. 25. சிசுபாலனைச் சிரமறுத்தது: சிசுபாலன் பிறந்த பொழுது நான்கு கைகளையும் மூன்று கண்களையும் உடையவனாக இருந்தான். அனைவரும் இதனைக் கண்டு வியப்பு எய்தினர். இந்நிலையில் ஆகாயவாணி, யார் இவனைத் தொடுகையில் இவனது கைகளிரண்டும் மூன்றாம் விழியும் மறையுமோ, அவனால்தான் இவனுக்கு மரணம்: என்று கூறிற்று. அவ்வாறே பலரும் தொட்டனர்; மறைய வில்லை. கண்ணன் தொட்டவுடனே அவை மறைந்தன. அதனால் இவனைக் கொல்பவன் கண்ணனே' என்றறிந்த இவனது அன்னை யாது செய்யினும் என் மகனைக் கொல்லலாகாது' என்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு ஒருவாறு இணங்கிய கண்ணன், =அத்தையே, இவன் எனக்கு நூறு பிழை செய்யுமளவும் இவன் பிழையைப் பொறுப்பேன்’ என்று கூறியருளினன். பின்பு சிசுபாலன் தனக்குக் கண்ணன் பகைவன் என்பதை இளமையிலேயே அறிந்து அதனாலும் முற்பிறப்பின் வாசனையாலும் வளர்ந்த பகைமையைப் பாராட்டி, எப் பொழுதும் அப்பெருமானுடைய திவ்விய குணங்களையும் திவ்விய சேஷ்டிதங்களையும் நிந்திப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான். இவனுக்கு மணம் செய்து கொடுப்ப தென்று உறுதி செய்திருந்த உருக்குமணியைக் கண்ணன் வலியக் கவர்த்து மணம் புரிந்து கொண்டது முதல் இவன் கண்ணனிடத்து மிக்க வயிரம் கொண்டனன். பிறகு இந்திரப் பிரத்தத்தில் நடந்த இராச சூய யாகத்தில் தர்ம